DIVORCE ஆகிடுச்சு.. 2 பெண் குழந்தைங்க.. BREAST CANCER-னால அவதி.. கணவருக்கு அது.. காமெடி நடிகை கண்ணீர்..!
பிரபல காமெடி நடிகை பிரியங்கா அரவிந்தன் சமீபத்தில் Galatta Tamil யூட்யூப் சேனலின் பேட்டியில் கலந்து கொண்டு தனது திரைப்பட வாழ்க்கையில் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் நகைச்சுவை பாத்திரங்களின் பயணத்தை பகிர்ந்து கொண்டார்.
பேட்டியின் போது, நிருபர் அவரிடம் "உங்களை ஈஸியா ஏமாத்திடலாம் போல, நீங்க ரொம்ப வெகுலிதனமா இருக்கீங்க" என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பிரியங்கா, தனது திரை வாழ்க்கையில் நகைச்சுவை மற்றும் கிளாமர் பாத்திரங்களுக்கு இடையேயான அனுபவங்களை விவரித்தார்.
பேட்டியில், 1999-இல் வெளியான "ஜோடி" படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் 12-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது நடித்த இந்த படத்தில் ஒரு கிளாமர் சீனுக்கு பயந்து தயங்கியதாகவும், அதை இன்னும் பார்க்கவில்லை என்றும் கூறினார்.
"அந்த சீனை படப்பிடிப்பு நடந்தபோது எனக்கு தெரியாமல் எடுத்தார்கள். ஷியர்ஆட்டோவில் அந்த காட்சியை எப்படி ஹேண்டில் பண்ணினேன் என்று இப்போது நினைத்தாலும் பயமாக இருக்கிறது.
அப்போ திட்டப்படுவேன் என்ற பயத்தில் செய்தேன்," என்று அவர் நெகிழ்ந்து பேசினார். மேலும், அந்த சமயத்தில் பிரசாந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்களுடன் பணியாற்றிய அனுபவத்தையும் பகிர்ந்தார்.
பிரியங்கா, தனது திரை வாழ்க்கையை சிறு வயதிலேயே தொடங்கியதாகவும், 14-15 வயதில் நடிக்க ஆரம்பித்ததாகவும் குறிப்பிட்டார். அவர் கூறுகையில், "அப்போ ஷாட்களை எப்படி எடுக்கிறார்கள் என்று தெரியாமல் நடித்தேன்.
கிளாமர் காட்சிகளை பற்றி முன்பே தெரிவிக்க மாட்டார்கள்; படப்பிடிப்பில் தான் தெரியும்," என்றார். மேலும், திருமணத்திற்கு பின் நடிப்பை நிறுத்தியதாகவும், கணவரின் விருப்பப்படி அவ்வாறு நடந்ததாகவும் தெரிவித்தார்.
ஆறு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் மீண்டும் நடிப்பு துறைக்கு திரும்பிய அவர், தற்போது தனது வாழ்க்கையை சமாளிக்கும் முயற்சியில் இருப்பதாகவும் கூறினார்.
தனது தனிப்பிரிவு (DIVORCE ) அனுபவத்தை பகிர்ந்து கொண்ட பிரியங்கா, அதை சிரித்து தாங்கியதாகவும், என்னை அவருக்கு பிடிக்கவில்லை என்பதால் பிரிந்து விட்டோம் எனவும் கூறினார். மேலும், அம்மாவின் மார்பக கேன்சர் நோயால் ஏற்பட்ட கஷ்டங்களை சமாளித்ததாகவும் நெகிழ்ச்சியுடன் பேசினார்.
"அம்மாவின் ஆபரேஷன் நடந்தபோது தூக்கமின்றி பிரஷாக இருந்தேன். ஆனால், கடவுளின் அருளால் அவர் மீண்டு வந்தார்," என்று அவர் கூறினார்.
மேலும், வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை கடவுளின் விருப்பமாக ஏற்று நகர்வதாகவும் தெரிவித்தார்.இந்த பேட்டி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது, மேலும் பிரியங்காவின் இயல்பான பேச்சு மற்றும் உணர்ச்சிகரமான பதில்கள் பாராட்டைப் பெற்றுள்ளன.