10 வருஷமா குழந்தை இல்லை.. தத்தெடுக்க மனசு வராத நடிகை.. விவாகரத்து முடிவில் வாரிசு நடிகர்
சென்னையைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவர், காதலித்து திருமணம் செய்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் குழந்தைப்பேறு இல்லாததால் மன உளைச்சலில் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த நடிகை, திரைப்படங்களில் இணைந்து நடித்தபோது தனது கணவரான நடிகருடன் உண்மையான காதலில் விழுந்து, பல ஆண்டுகள் நேசித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், திருமணத்திற்குப் பிறகு, ஆரம்ப ஆண்டுகளைத் தவிர, இருவரும் பெரிதாக மகிழ்ச்சியாக வாழவில்லை என்றும், கடந்த சில ஆண்டுகளாக ஒருவரையொருவர் பேசிக் கொள்வதே குறைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
குழந்தை இல்லாத விரக்தியால் இருவரும் ஒருவரை ஒருவர் நேசிப்பதை குறைத்து, தற்போது சினிமா பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குழந்தை பிறப்பு குறித்த பேச்சு எழும்போதெல்லாம் இருவருக்கும் இடையே சண்டை உருவாவதாகவும், நடிகர் “இனி குழந்தை பெறுவதற்கு வாய்ப்பில்லை” என முடிவுக்கு வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், நடிகையோ இன்னும் மருத்துவ சிகிச்சைகள் மூலம் குழந்தை பெற முயற்சிக்க வேண்டும் என வலியுறுத்தி, பெரிய மருத்துவர்களிடம் அப்பாயின்ட்மென்ட் பெற்று கணவரை தொடர்ந்து வற்புறுத்தி வருவதாகவும், இது அவருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தத்தெடுப்பது குறித்து நடிகைக்கு விருப்பமில்லை என்றும், இதுவே இருவருக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த பிரச்சினையால், இருவரும் சினிமாவில் தங்களை மூழ்கடித்து, தனிப்பட்ட உறவை புறக்கணித்து வருவதாகவும், இது தொடர்ந்தால் விரைவில் நடிகர் விவாகரத்து பெற தயாராக இருக்கிறார் எனவும் நெருங்கிய வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.
அதே நேரம், தன்னால் தன்னுடைய குடும்பத்தின் பெயரை கழங்கப்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதே இவர்கள் இன்னும் ஒன்றாக இருக்கக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த விவகாரம், சினிமா பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் சவால்கள் மற்றும் சமூக அழுத்தங்கள் குறித்து மீண்டும் விவாதத்தை தூண்டியுள்ளது. இருவரும் இது குறித்து பேசி ஒரு முடிவுக்கு வந்தால் மட்டுமே அவர்களது உறவு மீண்டும் மகிழ்ச்சியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.