2வது திருமணம் செய்யும் தன்ஷிகா.. நேரில் இதை சொன்னார்.. விஷாலை திருமணம் செய்ய காரணம்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷால், நடிகை சாய் தன்ஷிகாவை வரும் ஆகஸ்ட் 29 அன்று திருமணம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, சென்னையில் நடந்த ‘யோகி டா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், Reflect Prime யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், இந்த திருமணம் விஷாலின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.
விஷால், நடிகர் சங்க கட்டிடப் பணிகள் முடியும் வரை திருமணம் செய்ய மாட்டேன் என முன்பு அறிவித்திருந்தார். இந்த திட்டம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நிதி திரட்டல் மற்றும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
தற்போது கட்டிடப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், விஷாலின் திருமண அறிவிப்பு வெளியாகியுள்ளது. சபிதா ஜோசப் கூறுகையில், விஷால் முன்பு ஆந்திராவைச் சேர்ந்த அனிதா ரெட்டி பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்திருந்தார்.
கிட்டதட்ட அந்த நிச்சயதார்த்தமே கல்யாணம் போல தான் நடைபெற்றது. மட்டுமில்லாமல், நிச்சயதார்த்தம் முடிந்தாலே திருமணம் முடிந்து என்பது தான் நம்ம ஊர் வழக்கம். தாலி கட்டுவது என்பது ஒரு சடங்கு தான். விஷாலை பொறுத்தவரை அவரது முதல் திருமணம் தோல்வி என்பது தான் உண்மை. தற்போது, தன்ஷிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார் என்பது தான் சரியாக இருக்கும்.
ஆனால், நடிகர் சங்கம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் அரசியல் மோதல்கள் காரணமாக அந்த உறவு முறிந்தது. தன்ஷிகாவுடனான விஷாலின் உறவு, நீண்டகால நட்பில் இருந்தது. ஒரு கட்டத்தில், அது காதலாக மாறியுள்ளது.
இருவரும் இதற்கு முன் எந்த படத்திலும் இணைந்து நடிக்கவில்லை என்றாலும், தன்ஷிகாவின் ‘யோகி டா’ படத்திற்கு விஷால் ஆதரவளித்தார். இப்படம், தன்ஷிகாவின் மாமா அருண்குமார் தொடங்கி, அவரது மறைவுக்குப் பின் கிடப்பில் இருந்தது.
தற்போது கோவை தயாரிப்பாளர் மூலம் மீண்டும் முழுமையடைந்துள்ளது. சபிதா ஜோசப் கூறுகையில், “தன்ஷிகா அன்பான, பண்பான பெண். திருமணத்திற்குப் பின் விஷால் பொறுப்புகளை ஏற்பார், நடிகர் சங்கப் பணிகளை முன்னின்று கவனிப்பார்.
தன்ஷிகாவும் விஷாலை நன்றாக கவனித்து, அவருக்கு ஆதரவாக இருப்பார்,” என்றார். இந்த திருமணம், விஷாலின் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மேலும் நடிகர் சங்க கட்டிடப் பணிகளுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.