மனைவி கொடுக்க வேண்டிய விஷயத்தை ஆர்த்தி கொடுக்கல.. ஜெயம் ரவி காதலி பேச்சால் வெடித்த சர்ச்சை!

மனைவி கொடுக்க வேண்டிய விஷயத்தை ஆர்த்தி கொடுக்கல.. ஜெயம் ரவி காதலி பேச்சால் வெடித்த சர்ச்சை!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தி ரவியைப் பிரிவதாக 2024 செப்டம்பரில் அறிவித்து, சென்னை குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். 

15 ஆண்டு திருமண வாழ்க்கைக்குப் பின், இருவரும் பிரிவதற்கான காரணத்தை வெளிப்படையாகக் கூறவில்லை. ஆனால், ஆர்த்தியின் தாயின் மீதான குற்றச்சாட்டுகளும், ஆர்த்தி தனது தாயை ஆதரித்ததும் பிரிவுக்கு காரணமாக இருக்கலாம் என வதந்திகள் பரவின. 

இந்த விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், ரவி மோகன் பாடகி-ஆன்மிக ஆலோசகர் கெனிஷா பிரான்சிஸுடன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் கலந்துகொண்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

இணையத்தில் வைரலான இந்தப் புகைப்படங்கள், ரவி-கெனிஷா இடையே காதல் உறவு இருப்பதாக வதந்திகளை தூண்டியது. இதற்கு முன்பு கோவாவில் இருவரும் வேகமாக கார் ஓட்டியதற்கு அபராதம் செலுத்திய ரசீது இணையத்தில் பரவியது. இதுகுறித்து ரவி, “கெனிஷா ஒரு ஹீலர், அவரை இதில் இழுக்க வேண்டாம்” என விளக்கமளித்திருந்தார். 

ஆனால், திருமண நிகழ்வில் கெனிஷாவுடன் ரவி தோன்றியது ஆர்த்தியை கோபமடையச் செய்தது. ஆர்த்தி, இன்ஸ்டாகிராமில் உருக்கமான அறிக்கை வெளியிட்டு, “கடந்த ஒரு வருடமாக குழந்தைகளுக்காக அமைதியாக இருந்தேன். ரவி எங்களை உணர்ச்சி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் புறக்கணித்துவிட்டார். 

வீட்டை காலி செய்யுமாறு அவர் அனுப்பிய நோட்டீஸ் வேதனையளிக்கிறது. தந்தை என்பது பொறுப்பு, வெறும் பட்டம் அல்ல” எனக் குறிப்பிட்டார். இந்த அறிக்கை ரசிகர்களை நெகிழ வைத்தது. 

பொதுவாக ஒரு மனைவி கணவனுக்கு எதை கொடுக்கிறாரோ இல்லையோ அவருக்கு வீட்டில் ஒரு அமைதியான மனநிலையை கொடுத்தாக வேண்டும் போல் தான் அந்த கணவனால் குடும்பத்திற்காக இயங்க முடியும் என்று பலரும் கூறுவார்கள் ஆனால் அந்த அமைதியை ஒரு மனைவியாக ஜெயம் ரவிக்கு ஆர்த்தி கொடுக்கவில்லை என்பதை சூட்சுமமாக மறைமுகமாக கூறியிருக்கிறார் ஜெயம் ரவியின் காதலி கெனிஷா. 

அவர் கூறியதாவது, “மன அமைதி தரும் பெண்ணே ஆணை ஈர்க்கிறாள். அவள் வலிமையுடன் போட்டியிடாமல், அதை சமநிலைப்படுத்துகிறாள்” என்று மறைமுகமாக ஆர்த்திக்கு பதிலடி கொடுத்தார். இது இணையவாசிகளை கோபமடையச் செய்து, கெனிஷாவை விமர்சிக்க வைத்தது. 

ஆனால், கெனிஷா இதை பொருட்படுத்தாமல், “விமர்சனம் இருந்தால் நேரடியாக வாருங்கள்” என மற்றொரு பதிவில் சவால் விடுத்தார். இந்த மோதல், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. ஆர்த்திக்கு ஆதரவாக குஷ்பு, ராதிகா உள்ளிட்ட பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

விவாகரத்து வழக்கு இன்னும் முடிவடையாத நிலையில், இந்த சர்ச்சை தொடர்ந்து இணையத்தில் புயலை கிளப்பி வருகிறது.

LATEST News