வைரலான அந்தரங்க காட்சிகள்.. அது நான் தான்.. ஆனால்.. நடிகை பகீர்!
தமிழ் கலைத்துறையில் டிவி தொகுப்பாளர், நடிகை, நடனக் கலைஞர் என பன்முகத் திறமைகளுடன் பிரபலமானவர் சொர்ணமால்யா. ஆனால், அவரது வாழ்க்கை சர்ச்சைகளாலும் சவால்களாலும் நிறைந்தது.
டூரிங் டாக்கீஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், அவர் தனது கடந்தகால அனுபவங்களை வெளிப்படையாகப் பகிர்ந்தார். இது அவரது வாழ்க்கையின் உண்மைகளையும், புரிதல்களையும் வெளிப்படுத்தியது.
சொர்ணமால்யாவின் திருமணம், பெற்றோரின் முடிவால் சிறு வயதில் நடந்தது. பிரபலமாகி வந்த அவரை “கட்டுப்படுத்த” வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால், அவருக்கு தனது விருப்பங்களை வெளிப்படுத்த வாய்ப்போ, நேரமோ இல்லை. திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட முறிவு, சினிமாவால் ஏற்பட்டதல்ல என்று அவர் தெளிவுபடுத்தினார்.
பிரிவுக்குப் பின், அவர் படிப்பைத் தொடர்ந்தார், ஆனால் 18 ஆண்டுகள் மன உளைச்சலுடன் கழிந்தன. “யாரையும் மாற்ற முடியாது” என்பதை அவர் இந்தக் காலகட்டத்தில் உணர்ந்தார்.
சினிமாவில் தெளிவான இலக்கு இல்லாததும், வழிகாட்டுதல் இன்மையும் அவரை சிக்கல்களுக்கு இட்டுச் சென்றன. ஒரு ஆபாச திரைப்படத்தில்.. அது ஆபாச திரைப்படம் என்று தெரியாமலேயே நடித்தது மிகப் பெரிய சர்ச்சையானது.
வெறும், 10 நிமிட காட்சிக்காக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அவர், படத்தின் தன்மையை அறியாமல் நடித்திருக்கிறார். ஆனால், குட்டியான உடைகள் அணிந்து கொண்டு இப்படி மோசமான காட்சியில் நடித்த ஸ்வர்ணாமால்யாவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
இன்னும் சிலர் அது நீங்க தானா..? நிஜமாவே நீங்களா.? இல்ல, கிராபிக்ஸ் பண்ணிட்டாங்களா..? என்றெல்லாம் கூட கேட்டிருக்கிறார்கள்.
ஸ்வர்ணமால்யாவின் அந்த வீடியோ என்று இண்டர்நெட் வளர்ச்சி அடையாத அந்த காலத்திலேயே CD போட்டு விற்பனை செய்தார்கள். மிளகாய் பஜ்ஜி கணக்காக விற்பனை ஆகி அவரது அந்த வீடியோக்களை வைரலாக்கியது.
இந்த படத்தில் நடித்ததை “விபத்து” என்று வர்ணிக்கிறார் நடிகை சொர்ணமால்யா. இந்த அனுபவம் அவருக்கு மனதளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இருப்பினும், திருமணமே தனது மிகப் பெரிய தவறு என்று அவர் கருதினார். சமூகத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்று உறுதியாக நம்பினார். சொர்ணமால்யாவின் பேட்டி, அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட தவறுகளையும், அதிலிருந்து பெற்ற பாடங்களையும் வெளிப்படுத்துகிறது.
தெளிவின்மையும், சூழ்நிலையின் அழுத்தமும் அவரை சவால்களுக்கு உள்ளாக்கின. ஆனால், அவரது நேர்மையும், தன்னைப் புரிந்துகொள்ளும் முயற்சியும், பலருக்கு உத்வேகமாக அமைகிறது.