மீண்டும் வருகிறதா லட்சுமி ராமகிருஷ்ணனின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி..
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சொல்வதெல்லாம் உண்மை. லட்சுமி ராமகிருஷ்ணன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
குடும்ப பிரச்சனைகளில் இரண்டு தரப்பையும் அமர வைத்து பேசும் நிகழ்ச்சி தான் இது. இதில் பல சண்டைகளும் நடந்துள்ளது. சிலர் கேலிகிண்டலுக்கும் ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில், ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட்டு இருந்த ஷோ தற்போது மீண்டும் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பிரச்சனைகள் குறித்து பேச நபர்கள் தேவை என தொலைக்காட்சி விளம்பரம் செய்து இருக்கின்றனர். இதோ நீங்களே பாருங்க..