குட் பேட் அக்லி படத்தின் இரண்டாவது பாடல்.. எப்போது ரிலீஸ் தெரியுமா
ஆதிக் ரவிச்சந்திரன் - அஜித் குமார் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
மேலும். ஜிவி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சுமார் ரூ. 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படம், உலகளவில் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சமீபத்தில் வெளிவந்த முதல் பாடல் வெறித்தனமாக இருந்தது. ஜி.வி. பிரகாஷ் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இருவரும் இணைந்து பாடியிருந்தனர்.
இந்த நிலையில், முதல் பாடல் சூப்பர்ஹிட் ஆனதை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, குட் பேட் அக்லி படத்தின் இரண்டாவது பாடல் வரும் வாரம் வெளிவரவுள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர். இதுவும் கண்டிப்பாக அஜித்தின் ரசிகர்களுக்கு சிறப்பான தரமான விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.