கமலுடன் நெருக்கமான முத்தக்காட்சி.. முறிந்துபோன நடிகையின் காதல்
நடிகை சிம்ரன் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். சினிமாவின் உச்சத்தில் இருந்த நடிகை சிம்ரனை சுற்றி பல கிசுகிசுக்கள் உலா வந்தன. முதலில் நடிகர் விஜய்யை சிம்ரன் காதலித்து வருகிறார் என கிசுகிசுக்கப்பட்டது.
பின் பிரபு தேவாவின் சகோதரரும், நடன இயக்குநருமான ராஜு சுந்தரத்தை காதலித்தாக திரை வட்டாரத்தில் பேசப்பட்டது. இருவரும் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருந்த நிலையில்தான், கமல் ஹாசனுடன் ஒரு படத்தில் நடிகை சிம்ரன் இணைந்து நடித்து வந்தார்.
ராஜு சுந்தரத்திடம் சொல்லாமல் இப்படத்தில் நடித்து வந்த சிம்ரன், கமல் ஹாசனுடன் நெருக்கமான முத்தக்காட்சியில் நடித்துவிட்டாராம். இது ராஜு சுந்தரத்திற்கு தெரியவர, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு காதல் முறிவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் அப்போது வந்ததாக சொல்லப்படுகிறது.
பின், நடிகை சிம்ரன் மற்றும் கமல் இருவரும் காதலித்து வந்ததாகவும், இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்ததாகவும் கூட கூறப்பட்டது. ஆனால், இவை யாவும் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.