அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் இணைந்த முன்னணி நடிகர்.. சம்பவம் உறுதி

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் இணைந்த முன்னணி நடிகர்.. சம்பவம் உறுதி

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

அஜித்துடன் இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.

24 மணி நேரத்தில் Youtube-ல் 32 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனையும் படைத்தது. பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி வெளிவரவுள்ளது.

இப்படத்தில் அஜித் மனைவியும் நடிகையுமான ஷாலினி மற்றும் சிம்ரன் நடிக்கவுள்ளதாக தொடர்ந்து இணையத்தில் தகவல் வெளியாக படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தற்போது இந்த படத்தில் ஒரு முன்னணி நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிகர் சிம்புவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சிம்பு நடிகர் அஜித்தின் தீவிரமான ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.     

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் இணைந்த முன்னணி நடிகர்.. சம்பவம் உறுதி | Silambarasan In Ajith Movie

LATEST News

Trending News