அட்லீ அடுத்த படத்திற்கு கேட்ட சம்பளம்.. அதிர்ந்த தயாரிப்பாளர்

அட்லீ அடுத்த படத்திற்கு கேட்ட சம்பளம்.. அதிர்ந்த தயாரிப்பாளர்

இயக்குனர் அட்லீயின் ஜவான் படம் 1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்த நிலையில் அவரது அடுத்த படம் யாருடன் என்பது தான் ரசிகர்கள் எல்லோரிடமும் இருக்கும் ஒரு கேள்வி.

அட்லீ அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படம் இயக்கப்போவதாக முன்பு தகவல் வந்தது. அதில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கப்போகிறார் என்றும் கூறப்பட்டது.

ஆனால் அட்லீ அந்த படத்திற்காக கேட்ட பட்ஜெட் மிகப்பெரியதாக இருந்ததால் சன் பிக்சர்ஸ் அதில் இருந்து பின்வாங்கிவிட்டதாக தெரிகிறது.

அதனால் அட்லீ தற்போது தனது அடுத்த படத்திற்காக தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜூனுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார். அந்த படத்தினை தயாரிக்க தில் ராஜு உடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

இந்த படத்திற்காக அட்லீ 100 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டதாகவும், அதனால் தயாரிப்பாளர் தில் ராஜு அதிர்ச்சியில் இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறார்.

இந்த ப்ராஜெக்ட் உறுதியானால் விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம். 

LATEST News

Trending News