பிழைப்புக்காக அந்த வேலை செய்வதில் என்ன அசிங்கம்..? இளம் நடிகை பேச்சு.. கழுவி ஊத்தும் ரசிகர்கள்..!

பிழைப்புக்காக அந்த வேலை செய்வதில் என்ன அசிங்கம்..? இளம் நடிகை பேச்சு.. கழுவி ஊத்தும் ரசிகர்கள்..!

பாலிவுட் நடிகை பரீனிதி சோப்ரா சமீபத்தில் பேசிய கருத்து ஒன்று சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கையான பரீனிதி, தொழில் ஒன்றை அவமதிக்கும் விதமாக பேசியதாக ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். 

சமீபத்தில் பரீனிதி சோப்ரா ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது தொகுப்பாளர், "நான் அமெரிக்காவில் கட்டிட வேலை செய்திருக்கிறேன். நீங்கள் அப்படி ஏதாவது வேலை செய்திருக்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பினார். 

இந்த கேள்விக்கு பதிலளித்த பரீனிதி, "அவ்வளவு embarrassing ஆக எல்லாம் என் வேலை இருக்காது" என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார். 

பரீனிதியின் இந்த பதில் தான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் கடும் கோபத்துடன் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

கட்டிட வேலை செய்வது அசிங்கமான செயலா? ஏழை தொழிலாளர்களை இப்படி பேசுவது சரியா? என்று பரீனிதியை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பலரும் பரீனிதியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். 

"கடின உழைப்பை கேவலப்படுத்துவதா?", "சாதாரண மக்களை மட்டம் தட்டுவதா?", "பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?" என்றெல்லாம் ரசிகர்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர். 

கட்டிட தொழிலாளர்களின் உழைப்பை கொச்சைப்படுத்தும் விதமாக பரீனிதி பேசியது ஏற்றுக்கொள்ள முடியாதது என ரசிகர்கள் ஆவேசமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். 

பரீனிதி சோப்ராவின் இந்த சர்ச்சை பேச்சு, சமூகத்தில் உடல் உழைப்பை செலுத்தி கஷ்டப்படும் தொழிலாளர்களை அவமதிக்கும் செயல் என பலரும் கருதுகின்றனர். 

அனைத்து தொழில்களும் சமமானவை என்றும், எந்த தொழிலையும் தாழ்வாக பேச யாருக்கும் உரிமை இல்லை என்றும் சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த சர்ச்சை பேச்சு பரீனிதி சோப்ராவிற்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

LATEST News

Trending News