நடிகை திரிஷா திருமணம்..? மாப்பிள்ளை வயசு என்னன்னு பாருங்க..? திரிஷாவுக்கு என்ன ஆச்சு..? ரசிகர்கள் ஷாக்..!
நடிகை திரிஷா 2016ஆம் ஆண்டு ஐ-டிரீம் ஊடகத்திற்கு அளித்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த பேட்டியில் அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சினிமா வாழ்க்கை குறித்து பல விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார்.
பேட்டியில், தொகுப்பாளர் திரிஷாவின் திருமணம் ரத்து குறித்து கேள்வி எழுப்பிய போது, அது உண்மைதான் என திரிஷா பதிலளித்தார்.
சினிமாவில் இருப்பது மிகவும் கடினமான விஷயம் என்றும், தான் ஒரு சினிமா குடும்பத்தில் இருந்து வராததால், இந்த துறையில் ஜெயிப்பது சவாலாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், தனது குடும்பம் தன்னை பொத்தி பொத்தி பாதுகாப்பதாகவும், அவர்கள் தனக்கு மிகப்பெரிய பலம் என்றும் குறிப்பிட்டார்.
சினிமா உலகம் பல விதங்களில் பயன்படுத்தும் என்றும், நிறைய நெகட்டிவிட்டி நிறைந்ததாகவும் இருப்பதை திரிஷா வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டார்.
தன்னைப் பற்றி பரவும் எதிர்மறை செய்திகள் தன்னை கீழே இழுத்துச் செல்வதாகவும், ஆனால் இது போன்ற விஷயங்கள் தன்னை மன உறுதியுடையவளாக மாற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.
திருமணம் ரத்து தலைப்பு செய்தியானது தனக்கு சோகத்தை அளித்ததாகவும், மக்கள் உண்மை நிலையை புரிந்து கொள்ளாமல் தங்களுக்கு தோன்றிய கதைகளை கட்டுவதாகவும் திரிஷா வேதனை தெரிவித்தார்.
தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும், புறம் பேசுவது நல்ல விஷயம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தனது குடும்பமே தனது பலம் என்று நெகிழ்ச்சியுடன் கூறிய திரிஷா, தனது அம்மா, அப்பா மற்றும் பாட்டி ஆகியோர் தன்னை பற்றி வரும் கிசுகிசுக்களை கேட்டு சிரிப்பார்கள் என்றும், சென்னையில் தனக்கு நல்ல நண்பர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் இருப்பதாகவும் கூறினார்.
தனது திருமணம் ரத்து செய்தியை ஊடக நண்பர்கள் பிரேக்கிங் நியூஸ் ஆக்காமல் கண்ணியமாக கையாண்ட விதத்தை அவர் பாராட்டினார்.
பிரபலமாக இருப்பது பிரச்சனைகள் நிறைந்ததுதான் என்று ஒப்புக்கொண்ட திரிஷா, தான் ஒரு ஸ்ட்ராங்கான பெண் என்றும், குறைகள் இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் அனைத்தையும் எதிர்கொள்வேன் என்றும் கூறினார்.
தனது தந்தை, நினைப்பது போல் தான் எல்லாம் நடக்கும் என்று கூறுவார் என்றும், எதற்காகவும் போராட வேண்டும் என்று ஊக்கப்படுத்துவார் என்றும் தெரிவித்தார். தோல்விகள் பல வந்தாலும், சுய உதவி மற்றும் சுய ஹீலிங் மூலம் மீண்டு வந்து சினிமா ரேஸில் இன்னும் நிற்பதாக அவர் உறுதியுடன் கூறினார்.
இந்நிலையில், தற்போது திரிஷா பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக புதிய தகவல் ஒன்று பரவி வருகிறது. அந்த தயாரிப்பாளர் ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்து பெற்றவர் என்றும், திரிஷாவை விட 4 வயது இளையவர் என்றும் கூறப்படுகிறது.
திருமணமே வேண்டாம் என்று முன்பு கூறிய திரிஷா தற்போது திருமணம் செய்ய முடிவெடுத்தது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தன்னை விட இளையவரை திருமணம் செய்து கொள்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது உண்மையா அல்லது வழக்கம்போல வதந்தியா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.