மீண்டும் சினிமாவிற்கு வரும் அஜித் மனைவி ஷாலினி.. எந்த படத்தில் தெரியுமா
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளிவந்து வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.
கடந்த 2000ம் ஆண்டு நடிகர் அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பின் நடிகை ஷாலினி முழுமையாக சினிமாவிலிருந்து விலகிவிட்டார்.
இந்த நிலையில், தற்போது 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் சினிமாவில் ஷாலினி எண்ட்ரி கொடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுவும் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தில் ஷாலினி கேமியோ ரோலில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.