என் அப்பா இறந்து விட்டார்.. ஆனால்.. சில நேரங்களில்.. அந்த தப்பை பண்றேன்.. பிக்பாஸ் லாஸ்லியா கூறிய திடுக்கிடும் தகவல்..!

என் அப்பா இறந்து விட்டார்.. ஆனால்.. சில நேரங்களில்.. அந்த தப்பை பண்றேன்.. பிக்பாஸ் லாஸ்லியா கூறிய திடுக்கிடும் தகவல்..!

நடிகை லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய குடும்பம் மற்றும் ஆரம்ப கால வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.

லாஸ்லியா தனது குடும்பம் நடுத்தர வர்க்கத்தை விட மிகவும் கீழான நிலையில் இருந்ததாக கூறினார். அவருடைய தந்தை லாரி ஓட்டுநர் வேலை பார்த்து வந்தார், ஆனால் லாரியை விட சிறிய வண்டியைத்தான் ஓட்டி வந்தார். 

அந்த வண்டிலேயே தான் லாஸ்லியா மற்றும் அவரது சகோதரிகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வார்.அவருக்கு நான்கு சகோதரிகள் உடன் பிறந்தவர்கள். இதனால் அவர்களுக்கு சின்ன சின்ன விஷயங்கள் கூட எளிதில் கிடைக்காது. 

அவர்கள் சிறிய விஷயங்களுக்காக கூட மிகவும் ஏங்கி இருந்திருக்கிறார்கள். வருடத்திற்கு ஒரு முறையாவது புது துணி கிடைக்குமா, நல்ல உடை அணிந்து செல்ல மாட்டோமா என்று பல நாட்கள் ஏங்கியதாக லாஸ்லியா கூறினார். 

இதனால் பணத்தின் அருமை மற்றும் கஷ்டம் அவருக்கு நன்றாக தெரியும் என்று தெரிவித்தார்.அப்பா வெளிநாட்டிற்கு சென்ற பிறகு அவர்களின் கஷ்டம் கொஞ்சம் குறைந்தாலும், பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. லாஸ்லியா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்த பிறகுதான் சிறிய வருமானம் வரத் தொடங்கியது. 

அதன் பிறகு படிப்படியாக அவர்களுடைய குடும்பம் முன்னேற்றம் அடைய ஆரம்பித்தது.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போதுதான் லாஸ்லியா தன்னுடைய அப்பாவை கடைசியாக பார்த்துள்ளார். 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் இருந்த சமயத்தில், அவருடைய அப்பா மூன்று நாள் விடுமுறையில் இலங்கைக்கு வந்திருந்தபோது அவரை பார்க்க வந்தார். அதன் பிறகு அவர் உயிருடன் இல்லை, பிணமாகத்தான் அவர் முகத்தை பார்த்ததாக லாஸ்லியா உருக்கமாக கூறினார்.

அப்பா மீது மிகுந்த பாசம் மற்றும் மரியாதை வைத்திருப்பதாக தெரிவித்த லாஸ்லியா, அப்பா அவர்களுக்காக மிகவும் கஷ்டப்பட்டதாகவும், அவருடைய ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் நினைப்பதாக கூறினார். 

அதற்காக பல விஷயங்களை பார்த்து செய்வதாகவும் தெரிவித்தார். அப்பாவின் நினைவு வரும்போது, அவருடைய செல்போன் எண்ணிற்கு போன் செய்து பார்ப்பதாகவும், அந்த நம்பர் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தாலும், மனம் கேட்காமல் சில நேரங்களில் டயல் செய்து பார்ப்பதாகவும் கூறினார். 

 அதுபோல வாழ்க்கையில் பல தவறுகளை செய்து கொண்டுதான் இருப்போம், அது சில வருடங்கள் கழித்து தான் தவறு என்று புரியும் என்றும் லாஸ்லியா அந்த பேட்டியில் பேசியுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES