ஆடையின்றி நான் இருக்கும் வீடியோ.. என் புருஷன் இதை சொன்னார்.. நடிகை ரோஜா பரபரப்பு பேச்சு..!

ஆடையின்றி நான் இருக்கும் வீடியோ.. என் புருஷன் இதை சொன்னார்.. நடிகை ரோஜா பரபரப்பு பேச்சு..!

நடிகை ரோஜா சினிமாவில் எப்படி பிரபலமான நடிகையாக இருக்கிறாரோ. அதேபோல ஆந்திர அரசியலில் முக்கியமான அரசியல் பிரபலமாக பார்க்கப்படுகிறார். இவருடைய உண்மையான பெயர் ஸ்ரீலதா ரெட்டி என்பதாகும்.

1998-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த இவர் 2009-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார், அதன் பிறகு 2011-ம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து சட்ட மன்ற உறுப்பினராக வெற்றி பெற்று அமைச்சராகும் அளவிற்கு நடிகை ரோஜா உயர்ந்திருக்கிறார்.

ஆனால் ஒவ்வொரு தேர்தலின் போதும் அல்லது நடிகை ரோஜா ஏதேனும் பலமான குற்றச்சாட்டு வைக்கும் போதும் அவருக்கு எதிராக இருக்கக்கூடிய எதிர்க்கட்சிகள் எடுக்கக்கூடிய ஒரே ஆயுதம் என்னவென்றால் நடிகை ரோஜா ஆபாச படங்களில் நடித்தவர். அவர் ஆடையின்றி இருக்கும் வீடியோ காட்சிகள் எங்களிடம் இருக்கிறது.

அந்த CD-யை நாடு முழுக்க நாங்கள் விநியோகம் செய்வோம். இப்படி மிகவும் மோசமான முறையில் நடிகை ரோஜாவை விமர்சிப்பதை வாடிக்காக கொண்டிருக்கிறார்கள் நடிகை ரோஜாவின் எதிர்கட்சியினர்.

அவ்வப்போது இது குறித்து மிகப்பெரிய சர்ச்சைகள் வெடிப்பதும் இதற்கு நடிகை ரோஜா பதில் அளிப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ரோஜா இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்ட போது என்னுடைய கணவர் சொன்னது என்ன என்று கூறியுள்ளார்.

அதன் படி, நான் என் மனைவியை மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியலுக்கு அனுப்பி இருக்கிறேன். இப்படி அவரை கொச்சைப்படுத்துவதற்காக அல்ல. எதிர்க்கட்சியாக இருக்கும் நீங்கள் ரோஜா இருக்கக்கூடிய கட்சியின் மீது குற்றச்சாட்டு வைத்திருக்கிறீர்கள் என்றால் அதற்கு ஆதாரம் இருக்கிறது என்றால் பொதுவெளியில் எடுத்து வையுங்கள்.

actress roja

அதை பற்றி விவாதிக்கலாம். அதை விட்டுவிட்டு உங்கள் மீது குறை சொல்லும் போது என் மனைவி ரோஜாவை தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக பேசுவது எந்த வகையில் நியாயம்..? அது எப்படி அரசியலாகும்.. தனிப்பட்ட நபரை தாக்குவது தான் உங்கள் அரசியலா..? எங்களை வாழ வைத்த இந்த மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய முடியுமா என்ற முயற்சியில் என் மனைவியை நான் அரசியலுக்கு அனுப்பி இருக்கிறேன்.

ஆனால், இப்படி சம்பந்தமில்லாத விஷயங்களை கூறி அவரை கொச்சைப்படுத்துகிறீர்கள். உங்களிடம் நிஜமாகவே ஆதாரம் இருந்தால் அந்த ஆதாரத்தை முன்னால் எடுத்து வையுங்கள் என கூறினார். என்று நடிகை ரோஜா சமீபத்திய பேட்டி பதிவு செய்திருக்கிறார்.

LATEST News

Trending News