வேறு நபருடன் பிரபல விஜய் பட நடிகை மீண்டும் கர்ப்பம்..!
பிரபல நடிகை எமி ஜாக்சன் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார் இங்கிலாந்தை சேர்ந்த தொழிலதிபரும் தன்னுடைய காதல் கணவருமான Ed Westwick உடன் கொண்டாட்டமான மனநிலையில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
இதன் மூலம் தான் இரண்டாம் முறை கர்ப்பம் தரித்திருப்பதையும் ரசிகர்களுக்கு அறிவித்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இவருக்கு ஏற்கனவே ஆண்ட்ரியாஸ் என்ற ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இவருடைய முதல் கணவர் வேறு நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன காரணம் என்றால் நடிகை எமி ஜாக்சன் தன்னுடைய ஆண் நண்பர் மீது வைத்திருந்த அதீத நம்பிக்கை காரணமாக திருமணத்திற்கு முன்பே தன்னுடைய ஆண் நண்பர் மூலம் கர்ப்பமானார்.
கர்ப்பமான பிறகு சில மாதங்கள் எமி ஜாக்சன் உடன் ஒற்றுமையாக இருந்த அவருடைய ஆண் நண்பர் குழந்தை பிறந்ததும் எமி ஜாக்சனுக்கு டாடா காட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.
அதனை தொடர்ந்து தனி ஆளாக தன்னுடைய குழந்தையை வளர்த்துக் கொண்டிருந்தார். தன்னுடைய அம்மா வீட்டில் தங்கி தன்னுடைய குழந்தையை வளர்த்துக் கொண்டிருந்தார் நடிகை எமி ஜாக்சன்.
அதன் பிறகு தற்போது பிரபல தொழிலதிபரும் தன்னுடைய நீண்ட நாள் நண்பருமான ஆன Ed Westwick என்பவரை காதலித்துக் கொண்டிருந்த நடிகை எமி ஜாக்சன் கடந்த சில வருடங்களாக அவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து கொண்டிருந்தார்.
சமீபத்தில் தான் அவரை திருமணம் செய்து கொண்டார். இந்த முறை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு கர்ப்பமாவதை தவிர்த்து விட்டார் நடிகை எமி ஜாக்சன்.
திருமணம் முடிந்து சில மாதங்கள் தான் ஆகிருக்கும் நிலையில் தற்போது இரண்டாம் முறையாக கர்ப்பம் தரித்து இருக்கிறார் அம்மணி. இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்