படுக்கையில் என்னால் சுத்தமா முடியல.. விட்டுடுங்கன்னு அவரிடம் கெஞ்சினேன்.. மனம் திறந்த சமந்தா..!

படுக்கையில் என்னால் சுத்தமா முடியல.. விட்டுடுங்கன்னு அவரிடம் கெஞ்சினேன்.. மனம் திறந்த சமந்தா..!

தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது அதனை பொருட்படுத்தாமல் தன்னுடைய காதலரும் சக நடிகருமான பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை சமந்தா.

பொதுவாக திருமணம் ஆகிவிட்டால் நடிகைகளுக்கு மார்க்கெட் போய்விடும். ஆனால், நடிகை சமந்தாவிற்கு திருமணத்திற்கு பிறகும் பட வாய்ப்புகள் குவிந்தன.

அதே சமயம் திருமணம் ஆகிவிட்டது என்பதால் அந்த காட்சியில் நடிக்க மாட்டேன் இந்த காட்சி நடிக்க மாட்டேன் என எந்த கட்டுப்பாடும் விதிக்காமல் படு சூடான படுக்கை அறை காட்சிகள் முதல் மோசமான பெண்ணாக தோன்றும் காட்சிகள் வரை அனைத்து கதாபாத்திரங்களையும் ஏற்று கலக்கினார்.

இது நாக சைதன்யா குடும்பத்தில் புகைச்சலை கிளப்பியது என்று கூறப்பட்டது. நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகும் வேறு நடிகர்களுடன் படுக்கையை காட்சியில் நடிப்பதை ஒரு நடிகராக மட்டுமில்லாமல் ஒரு கணவராக நாகசைதன்யாவால் எப்படி ஜீரணித்துக் கொள்ள முடியும்..? என்பதில் ஆரம்பித்து மோசமான கருத்துக்கள் சமந்தாவை நோக்கி வீசப்பட்டன.

யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை.. திடீரென நடிகை சமந்தா நாக சைதன்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர். தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் நடிகர் நாக சைதன்யா.இது ஒரு பக்கம் இருக்க, தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை சமந்தா. அந்த வகையில், சிட்டாடல் என்ற வெப் சீரிஸ் ஒன்றில் நடித்திருக்கிறார் இந்த வெப் சீரிஸில் நடித்தது குறித்து நடிகை சமந்தாவிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த சிட்டாடல் வெப் சீரிஸில் நீங்கள் இதுவரை ஏற்று நடித்திராத ஒரு கேரக்டரை ஏற்று நடித்திருக்கிறீர்கள். இந்த கதாபாத்திரத்தை உங்களால் நடிக்க முடியும்.. என்று நீங்கள் நம்பினீர்களா…?

ஏனென்றால் இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு நடந்த போது நீங்கள் உடல் நலக்குறைவு காரணமாக படுத்த படுக்கையாக இருந்தீர்கள். அந்த நேரத்திலும் இப்படியான ஒரு படத்தில் நடிக்க முடியும் என்று ஒப்புக் கொள்வதற்கு என்ன காரணம்..? என கேள்வி எழுப்பப்பட்டது.

samantha citadel poster

இதற்கு பதில் அளித்த நடிகை சமந்தா, நிச்சயமாக நான் இந்த படத்தில் நடித்த ஒப்புக்கொள்ளவே இல்லை. இந்த வாய்ப்பு வந்தபோது எனக்கு உடல்நிலை மிக மோசமாக இருந்தது.

படுத்த படுக்கையாக சில மாதங்கள் இருந்தேன்.. படுக்கையில் என்னால் சுத்தமாக முடியவில்லை... அடுத்தடுத்த சிகிச்சைக்கு என்னுடைய உடல் ஒத்துழைக்குமா என்ற கேள்வியே அதிகமாக இருந்தது.

அந்த நேரத்திலும் இந்த படத்தில் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என இந்த படத்தின் இயக்குனர்கள் என்னிடம் கேட்டார்கள். என்னால் முடியவே முடியாது என அவர்களிடம் கெஞ்சினேன்.

samantha citadel poster

கடைசியாக இந்த கதாபாத்திரத்தை பாருங்கள். படத்தின் ஹீரோவை பாருங்கள். நிச்சயமாக உங்களால் மட்டும் தான் இந்த கதாபாத்திரத்தை செய்ய முடியும் என கேட்டார்கள்.

சரி உடல்நலம் சரியா உடல்நலம் பெற்ற பிறகு நடிக்கிறேன் என ஒப்புக்கொண்டேன். ஆனால் நான் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பாக இந்த வெப்சீரிஸ் வந்திருக்கிறது என பேசி இருக்கிறார் நடிகை சமந்தா

LATEST News

Trending News