'அந்த நடிகை இனி என் படங்களில் கூடவே கூடாது'.. பிரபல நடிகர் போட்ட ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!
மாஸ் நடிகர் தனது படங்களில் அந்த புஸ் புஸ் நடிகையை ஒப்பந்தம் செய்யக் கூடாது என உத்தரவு போட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
கோலிவுட் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் அந்த மாஸ் நடிகர். பல கோடி சம்பளம் வாங்கும் அந்த நடிகருக்கு ரசிகர்களும் பல கோடிதான். அந்த நடிகரை வைத்து ஒரு படமாவது இயக்கி விட மாட்டோமா என காத்துக்கிடக்கின்றனர் பல இளம் இயக்குநர்கள். அந்த மாஸ் நடிகரை வைத்து படம் பண்ண அக்கட தேசத்து இயக்குநர்கள் மட்டுமின்றி தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு வருகின்றனர்.
இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள்தான் இப்படி என்றால் நடிகைகள் அதற்கும் மேல். தங்களுக்கு வெயிட்டான கதாப்பாத்திரம் இல்லாவிட்டாலும் சரி, நடிக்க வாய்ப்பே இல்லாவிட்டாலும் சரி, நடிகரின் படத்தில் சும்மா வந்து போனாலே போதும் என அவருடன் ஜோடி போட வெளிப்படையாகவே வாய்ப்பு கேட்டு வருகின்றனர்.
அப்படி பட்ட நடிகரை அவமானப்படுத்தி விட்டார் புஸ்புஸ் நடிகை. வட நாட்டை சேர்ந்த அவர் குடும்பம் குழந்தைகள் என தமிழ் நாட்டில் செட்டிலானார். ஆரம்பத்தில் அடக்கி வாசித்த அந்த நடிகை தமிழ் நாட்டு மருமகள் ஆன பிறகு சில காலம் நடிப்புக்கு லீவு விட்டிருந்தார். பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய அந்த நடிகை அதிகம் பேசவும் ஆரம்பித்தார்.
இதனால் சில சர்ச்சைகளிலும் சிக்கினார் நடிகை. இந்நிலையில் மாஸ் நடிகரின் படத்தில் நடிகை ஒப்பந்தமானார். சில நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்த அவர், ஹீரோவுக்கு சமமாக தனக்கு காட்சிகள் இல்லை என கூறி படப்பிடிப்புக்கு டாட்டா காண்பித்தார். மாஸ் நடிகரிடம் கூட சொல்லாமல் பறந்துவிட்டார் நடிகை.
இதனால் ஆரம்பத்தில் வருத்தப்பட்டார் மாஸ் நடிகர். ஆனால் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற புஸ்புஸ் நடிகை மாஸ் நடிகரின் படத்தை விமர்சித்து பேசியுள்ளார். இதனால் கடுப்பான மாஸ் நடிகர் இனிமேல் எந்த காரணத்திற்காகவும் அந்த நடிகையை தனது படங்களில் புக் செய்யக் கூடாது என ஸ்ட்ரிக்ட்டாக ஆர்டர் போட்டுள்ளாராம். இப்போது மாஸ் நடிகரின் இந்த உத்தரவுதான் கோடம்பாக்கத்தில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.