பெரிய உலக அழகின்னு நெனனப்பு.. காதலித்த நபரின் அந்த உறுப்புக்கு வேட்டு வைத்த சீரியல் நடிகை..!
தொலைக்காட்சி தொகுப்பாளராக ஊடகப் பணியை ஆரம்பித்த நடிகை ஃபரீனா ஆசாத், விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ், ராஜ் டிவி போன்ற தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
கிச்சன் கலாட்டா, அஞ்சறைப்பெட்டி, கோலிவுட் அன்கட் மற்றும் ஷோரீல் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றியதன் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும், சன் டிவியில் ஒளிபரப்பான அழகு என்ற சீரியலில் அறிமுகமானார். பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பெரும் புகழ் பெற்றார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்ட அவர், தனியார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, சமூக வலைத்தளங்களில் போட்டோ ஷூட் நடத்துவது என எப்போதும் பிஸியாக இருக்கிறார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை ஃபரீனா பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது. தனக்கு லவ் டார்ச்சர் செய்த நபருக்கு அவர் அளித்த பதில் தான் இதற்கு காரணம்.
ஃபரீனாவிடம் ஒருவர் தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து தொந்தரவும் செய்து வந்துள்ளார். அவரைத் தவிர்க்க ஃபரீனா தனது வீட்டில் முஸ்லிம் பையனாக இருந்தால் மட்டுமே திருமணத்திற்கு ஒப்புக்கொள்வார்கள் என்று பொய் கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த நபர் மருத்துவமனைக்கு சென்று சுன்னத் செய்து கொண்டு மீண்டும் ஃபரீனாவிடம் வந்து தன்னை காதலிக்கும்படி கூறியுள்ளார். ஆனால், அப்போது மறுத்து விட்டதாக கூறியுள்ளார் ஃபரீனா.
இந்த சம்பவத்தை மறக்க முடியாத நிகழ்வாக குறிப்பிட்ட ஃபரீனாவின் பேச்சை கேட்ட ரசிகர்கள் கொதித்து போயுள்ளனர். உங்களுக்கு அந்த பையனை பிடிக்க வில்லையென்றால் முதலிலேயே மறுப்பு தெரிவித்திருக்கலாம். அல்லது, அவர் மீது புகார் கொடுத்திருக்கலாம்.
அவருக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக நீங்கள் எதையோ பேசிய பிறகு தான் அந்த நபர் அப்படியொரு முடிவை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அந்த நபர் அப்படி செய்த பிறகு நீங்கள் மறுப்பு தெரிவித்துள்ளீர்கள்