டான்ஸ் மாஸ்டருடன் நடிகை அசின் அடித்த கூத்து..! பலரும் பார்த்திடாத போட்டோஸ்..!

டான்ஸ் மாஸ்டருடன் நடிகை அசின் அடித்த கூத்து..! பலரும் பார்த்திடாத போட்டோஸ்..!

கேரளத்து பைங்கிளியான அசின், மாடலிங் துறையில் இருந்து நடிகையாக உருவெடுத்தவர். மலையாளத்தில் அறிமுகமானாலும், வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு திரையுலகிற்குச் சென்றார். பின்னர், ஜெயம் ரவிக்கு ஜோடியாக “எம்.குமரன் சன் ஆஃப் மஹாலட்சுமி” திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

அசின், சூர்யாவுக்கு ஜோடியாக “கஜினி”, விக்ரமுக்கு ஜோடியாக “மஜா”, விஜய்க்கு ஜோடியாக “சிவகாசி”, அஜித்துடன் “ஆழ்வார்” என முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்தார். தமிழைத் தொடர்ந்து பாலிவுட்டிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

அப்போதுதான், நடிகர் சல்மான்கானின் நண்பரும், மைக்ரோமேக்ஸ் உரிமையாளர்களில் ஒருவருமான ராகுல் ஷர்மாவின் நட்பு கிடைத்தது. அது காதலாக மாறி, இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

அசின் தமிழில் நடித்த “எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி” படத்தில் இடம்பெற்ற “சென்னை செந்தமிழ்” பாடல் படப்பிடிப்பின்போது, நடன இயக்குனர் பிருந்தாவுடன் அவர் ஆடிய கூத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அறிமுக நடிகையாக இருந்த அசின் நடனமாட மிகவும் சிரமப்பட்டுள்ளார். ஆனால், பிருந்தா மாஸ்டர் அவரை அழகாகவும், பொறுமையாகவும் கையாண்டு அந்தப் பாடலை முடித்துள்ளார்.

பாடலின் ஷூட்டிங் முடிந்த பிறகு, நடன இயக்குனர் பிருந்தாவை உப்பு மூட்டை தூக்குவது போல தூக்கி கூத்து கட்டியுள்ளார் அசின். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

அசின், தனது நடிப்புத் திறமையாலும், நடனத் திறமையாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அவரது எளிமையான மற்றும் நகைச்சுவையான நடவடிக்கைகள் அவரை மேலும் பிரபலமாக்குகின்றன.

LATEST News

Trending News