திரும்பவும் கவர்ச்சி ஆட்டத்தை ஆரம்பிக்கும் நடிகை பூஜா ஹெக்டே.. ஷாக்காகும் ரசிகர்கள்..
தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை பூஜா ஹெக்டே, நடிகர் நாக சைதன்யா நடிப்பில் வெளியான ஒக்க லைல பாரோ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழில் முகமூடி படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகினார். அதன்பின் தமிழில் வாய்ப்பில்லாமல் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி நடித்து வந்தார்.
சமீபத்தில் ராதேஷ்யாம், பீஸ்ட், ஆச்சார்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்தும் சரியான பெயர் அவருக்கு அமையாமல் போனது. தொடர் தோல்வி படங்களால் அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து படங்கள் கையை விட்டு நழுவிக்கொண்டே போவதால் அவரின் மார்க்கெட்டும் சரிய தொடங்கியுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் பூஜா ஹெக்டேவிற்கு படவாய்ப்புகள் அதிகளவில் வந்தும் தயாரிப்பாளர் வீட்டு வாசலில் நிற்கும் அளவிற்கு அவரது கால்ஷீட் இருந்தது. ஆனால் தற்போது ஒரு படம் கூட வராமல் இருக்கிறது. அவர் நடித்த 17 படங்களில் 10 படங்கள் மட்டுமே பாக்ஸ் ஆபிசில் 100 கோடி வசூலை ஈட்டியது.
வாய்ப்பில்லாமல் தற்போது வீட்டிலேயே முடங்கி இருக்கிறார். எப்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களையாவது பகிர்ந்து வருவார். ஆனால் தற்போது அதையும் விரக்தியில் குறைத்துக்கொண்டிருக்கிறார். தற்போது தேவா என்ற படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, இறுக்கமான சிகப்பு நிற ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை மயக்கி வருகிறார்.