ஆணுறை போட முதல் இத பண்ணனும்.. ஓபனாக பேசிய நடிகை இலியானா..!

ஆணுறை போட முதல் இத பண்ணனும்.. ஓபனாக பேசிய நடிகை இலியானா..!

போர்த்துகீசிய நடிகையான நடிகை இலியானா ஹிந்தி, தெலுங்கு, தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் மாடலிங் துறையில் ஜொலித்த இவர் 2006- ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.
இவர் தேவதாசு என்ற தெலுங்கு படத்தில் நடித்ததை அடுத்து இந்த திரைப்படம் வசூல் ரீதியில் மாபெரும் வெற்றியை தந்ததை அடுத்து தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம் ஃபேர் விருதை பெற்றார்.

அந்த வகையில் 2006 -ஆம் ஆண்டு போக்கிரி, ராக்கி படத்தில் நடித்த இவர் 2007-இல் முன்னா 2008-இல் ஜல்சா 2009-இல் கிக் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ் திரைப்படத்தை பொறுத்த வரை இவர் 2006-இல் கேடி என்ற திரைப்படத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். தென்னிந்திய மொழி படங்கள் மட்டுமல்லாமல் ஹிந்தி படத்திலும் நடித்து அசத்திய இவர் அண்மை பேட்டி ஒன்றில் பேசிய விவகாரம் இணையங்களில் காட்டுத் தீயாய் பரவி வருகிறது.

தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காததால் அக்கட தேச திரைப்படங்களில் நடித்த இவர் ஹிந்தி திரைப்படத்திலும் கவனத்தை செலுத்தி வரும் நிலையில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளி வந்த நண்பன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு அழைத்து வரப்பட்டார்.

இதனை அடுத்து சில மாதங்களுக்கு முன்பு இலியானா திடீர் என தான் கர்ப்பமாக இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு செய்திகளை போட்டதை அடுத்து இணையமே கிடுகிடுத்தது.
திருமணமே ஆகாத இலியானா எப்படி கர்ப்பமானார் என பல்வேறு வகையான கேள்விகள் எழுந்த நிலையில் இவர் தன் காதலரை அறிமுகம் செய்தார்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். மேலும் இந்த குழந்தையின் புகைப்படத்தையும் இணையதள பக்கங்களில் பகிர்ந்து தன்னுடைய மகிழ்ச்சியை அனைவரோடும் பகிர்ந்து கொண்டார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆணுறை உபயோகிப்பது பற்றி தன் கருத்தை ஆழமாக பதிவு செய்திருக்கிறார். இதில் ஆணுறை உபயோகிப்பது பால்வினை நோய்களை தடுக்க உதவி செய்வதோடு தேவையற்ற கர்ப்பத்தை தடுக்கவும் பயன்படுவதாக ஓப்பனாக பேசி இருக்கிறார்.

இந்த ஆணுறைகளை பயன்படுத்தும் போது ஆணுறை பாக்கெட்டுகள் பிரியாமல் ஓட்டை இல்லாமல் இருக்கிறதா? என்று பரிசோதிக்க வேண்டும்.
ஏனென்றால் ஆணுறை தயாரிப்பின் போது ஏற்படும் சில தவறுகளால் பாக்கெட்டுகள் கிழிந்தோ அல்லது ஓட்டையாகவோ வர வாய்ப்புகள் உள்ளது.

எனவே அதனை அணியும் முன்பு அதை தவிர்க்க வேண்டும் என நினைக்கக்கூடிய நீங்கள் உங்கள் பாதுகாப்பான வழிக்காக அதை பரிசோதிப்பது தவறு இல்லை என்ற கருத்தை பதிவிட்டு இருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அவர் சொன்ன கருத்து உண்மை உள்ளது என்று பலரும் நடிகை இலியானாவிற்கு ஆதரவாக பேசியிருக்கிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES