தமிழ்நாட்டில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலேயே TRPயில் முதல் இடத்தை பிடித்து வருகிறது பாரதி கண்ணம்மா. பெண்ணின் போராட்டை பற்றி இந்த சீரியல் பேசுவதாலேயே மக்களிடம் அதிக வரவேற்பு பெற்றிருக்கிறது. அடுத்தடுத்தும் அதிரடியான கதைக்களம் அமைந்து வருகிறது.
மக்கள் எப்போது இவர்கள் சேர்வார்கள் என எதிர்ப்பார்க்கிறார்கள், ஆனால் பாரதி-கண்ணம்மா இருவரும் சேர்ந்தாலே சீரியல் முடிந்துவிடும் என்பது தான் உண்மை.
விஜய் தொலைக்காட்சியில் இரண்டு சீரியல்களின் மெகா சங்கமம் நடந்து வருகிறது. அதன்படி இப்போது என்ன தகவல் என்றால் பாரதி கண்ணம்மா சீரியலுடன் ராஜா ராணி 2 சீரியலின் மெகா சங்கமம் நடக்க உள்ளதாம்.
இந்த தகவல் ரசிகர்களுக்கு படு குஷியை தந்துள்ளது.