சாமியார் பேச்சைக்கேட்டு திருமணம் செய்து செட்டிலாகிய கண்ணழகி மாதவி!! பயில்வான் கொடுத்த ஷாக்..
80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை மாதவி. பல வெற்றிப்படங்களில் நடித்து வந்த மாதவி திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி குடும்பம், குழந்தைகள் என வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார்.
அவருக்கு மூன்று மகள்கள் இருக்கும் நிலையில் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் மாதவியின் திருமண ரகசியத்தை பற்றி பகிர்ந்துள்ளார். அதில், நடிகை மாதவி, கமல், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து கண்ணழகி மாதவி என்ற பெயரையும் எடுத்தார். அந்தளவிற்கு அவரின் கண்கள் வசீகரமாக இருக்கும்.
ஆன்மீகத்தின் மீது மிகுந்த ஈடுபாடு வைத்திருந்த நடிகை மாதவி, சாமியார் ராம என்பவரின் பக்தையாக மாறி, திருமணம் செய்து கொள்ளாமே இருந்தார்.
இதையறிந்து கொண்ட சாமியார் ராம, தொழிலதிபர் ரால்ப் சர்மாவை அறிமுகப்படுத்தி அவரை திருமணம் செய்து கொள்ளும்படி சொல்லியிருக்கிறார்.
நடிகை மாதவி, சாமியாரின் பேச்சை தட்டாம தொழிலதிபர் ரால்ப் சர்மாவை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி, இப்போது மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருவதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.