என்னடா பண்ணி வெச்சுருக்கீங்க.. அடையாளம் தெரியாமல் மாறிய பேபி ஜான் கீர்த்தி சுரேஷ்...
தமிழ் சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் சினிமாவிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் வரை பிரபலமாகியுள்ளார்.
பேபி ஜான் படத்தின் மூலம் ஹிந்தியில் ஹீரோயினாகவும் களமிறங்கியுள்ளார். இப்படம் டிசம்பர் மாதம் வெளிவரவுள்ளது. இவர் தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.
அதை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். கீர்த்தி சுரேஷ் கைவசம் தற்போது ரிவால்வர் ரீட்டா, கண்ணிவெடி ஆகிய படங்கள் உள்ளனர்.
தற்போது பேபி ஜான் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் டீசர் நல்ல வரவேற்பு பெற்று வந்தாலும் கீர்த்தி சுரேஷை, பிளாஸ்டிக் சர்ஜரி மூகம் போல் மாற்றியிருப்பது தற்போது கலாய்க்கப்பட்டு வருகிறது.