“கீழே என்ன இவ்ளோ பெரிய கேப்..” விலைமாதுவின் பதிலை கேட்டு மிரண்ட மிருணாள் தாகூர்..!

“கீழே என்ன இவ்ளோ பெரிய கேப்..” விலைமாதுவின் பதிலை கேட்டு மிரண்ட மிருணாள் தாகூர்..!

நடிகை மிருணாள் தாகூர் பற்றி பெரிய அறிமுகம் தேவையில்லை. சமீபத்திய பேட்டி ஒன்றில் விலைமாதுவுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து பேசியிருக்கிறார். 

மிருணாள் தாகூர் ஒரு நடிகை. இவர் எதற்கு விலைமாதுவிடும் பேச வேண்டும்..? விலைமாதுவுக்கும் மிருணாள் தாகூருக்கும் என்ன தொடர்பு..? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். 

நடிகை மிருணாள் தாகூர் கடந்த 2018 ஆம் ஆண்டு லவ் சோனியா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் சில காட்சிகளில் விலைமாதுவாக நடிக்க வேண்டியதாக இருந்தது. 

விலை மாது என்றால் என்ன..? அவர்களுடைய வாழ்க்கை சூழல் எப்படி இருக்கும்..? அவர்களுடைய தினசரி வாழ்க்கை எப்படி இருக்கும்..? என்பதெல்லாம் தெரியாமல் விலைமாதுவாக நடிக்க முடியாது என்பதால் தன்னுடைய உதவியாளர்கள் சிலரின் துணையோடு விலைமாதுக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று அங்கு சில நாட்கள் தங்கி அனைத்தையும் கற்றுக் கொண்டு வந்திருக்கிறார் நடிகை மிருணாள் தாகூர். 

இந்த இடைப்பட்ட நேரத்தில் நடிகை மிருணாள் தாகூர் ஏற்பட்ட பல்வேறு அனுபவங்கள் இந்த படத்தின் வெற்றிக்கு உதவியாக இருந்தன என கூறியிருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், விலை மாதுக்களுடன் தங்கியிருந்த போது ஒரு பெண்ணுடன் நான் பேசினேன். 

அவ்வளவு அழகான முகம், ஒரு சினிமா நடிகை போல இருந்தார். ஆனால், குடும்ப சூழல் காரணமாக இந்த தொழிலுக்கு வந்திருக்கிறார். அவரிடம் நான் நிறைய விஷயங்களை பேசினேன். 

நான் எதை பேசினாலும் அவருடைய முகபாவனை எதுவும் மாறாமல் அப்படியே இருக்கிறது. சந்தோஷமான விஷயமாக இருந்தாலும்.. சோகமான விஷயமாக இருந்தாலும்.. அவருடைய முகபாவனை மாறாமலேயே இருந்தது. 

இதற்கு என்ன காரணம் என்று அவரிடமே கேட்டேன். அதற்கு அவர். நான் உயிரோடு இருக்க கூடிய ஒரு பிணம். என்னுடைய கஷ்டங்களை நினைத்து யாராவது எங்களை காப்பாற்ற மாட்டார்களா..? என்று நினைத்து நினைத்து.. எதிர்பார்த்து எதிர்பார்த்து.. கண்ணீர் விட்டு கதறி அழுது இதற்கு மேல் வேதனைப்படுவதற்கு.. சோகப்படுவதற்கு.. சிரிப்பதற்கு.. அழுவதற்கு.. ஒன்றுமே இல்லை என்ற சூழலில் என்னுடைய குடும்பத்திற்காக நான் இந்த வேலையை செய்து கொண்டிருக்கிறேன். 

நிச்சயமாக எனக்குள் எந்த உணர்வுமே இல்லை. அதனால் தான் என்னால் எந்த உணர்ச்சியையும் என்னுடைய முகத்தில் காட்ட முடிவதில்லை என கூறினார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. 

அவருடைய வலியை அந்த வார்த்தைகளில் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. பேசிக் கொண்டிருக்கும் பொழுது அந்த பெண்ணின் கட்டிலுக்கு அடியில் பெரிய கேப் இருந்ததை கவனித்தேன்.  அது என்ன உன்னுடைய கட்டிலுக்கு அடியில் மட்டும் பெரிய கேப் இருக்கிறது..? கட்டில் உயரமாக இருக்கிறது..? என்று கேட்டேன். 

அதற்கு அவர், என்னுடைய குழந்தை இங்கு தான் படுத்து தூங்குவான். வேறு யாருடனும் இருக்க மாட்டான். அவனுக்கு வசதியாக இருக்க வேண்டுமென்று கட்டிலை சற்று உயரப்படுத்தி இருக்கிறேன். 

என்னுடைய கணவரும் இங்குதான் கீழே படுத்துக் கொள்வார். இந்த அறை சிறியது என்பதால் இந்த ஏற்பாடு என கூறினார். அப்படி என்றால் உன் கணவர் குழந்தைகள் இருக்கும் போதே இப்படியான தொழிலில் ஈடுபடுவீர்களா..? என்று கேட்டேன். 

ஆமாம், என் குழந்தையும் என் கணவரும் கீழே படுத்திருப்பார்கள். அவர்கள் இருக்கும்போதே அதெல்லாம் சகஜமாக நடக்கும். ஒரு நாளைக்கு 10 பேர் முதல் 15 பேர் வரை வருவார்கள். ஒருவருக்கு 50 ரூபாய் வீதம் எனக்கு சம்பளம் கொடுக்கப்படும் என கூறினார். 

50 ரூபாய் சம்பளமா..? ஒரு டாலருக்கும் குறைவான ஒரு தொகைக்கு இவ்வளவு கஷ்டப்பட வேண்டுமா..? என்று எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. 

படம் வெளியான பிறகு என்னால் முடிந்த உதவியை அந்த பெண்ணுக்கு செய்தேன். தற்போது அந்தப் பெண் அந்த மோசமான சூழலில் இருந்து விலகி நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார். 

ஆனால் இதுபோல நிறைய பெண்கள் இருக்கிறார்கள் என வேதனை ததும்ப பேசி இருக்கிறார் நடிகை மிருணாள் தாகூர். இவருடைய இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES