விஜய்யின் 69வது பட நாயகி பூஜா ஹெக்டேவின் மயக்கும் போட்டோஷூட்..
தமிழ் சினிமாவில் இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2012ல் வெளியான முகமூடி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை பூஜா ஹெக்டே.
ஆனால் அப்படம் சரியான ஓடவில்லை என்பதால் பூஜா ஹெக்டேவிற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் தெலுங்கு பக்கம் சென்றார்.
தெலுங்கு சினிமாவில் ஒருசில படங்களில் நடித்து டாப் இடத்தினை பிடித்த பூஜா, அல்லு அர்ஜுனின் ஆல வைகுண்டபுரமுலு படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
இப்படத்தினை தொடர்ந்து பிரபாஸின் மிகப்பெரிய பட்ஜெட் படமான ராதே ஷாம் படத்தில் நடித்தார்.
ஆனால் படம் படுதோல்வியை தழுவியது. நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்த பூஜா, ஆச்சாரியா, F3, சர்கஸ், கிசி க பாய் கிசி கி ஜான் என்ற இந்தி படத்திலும் நடித்து வந்தார்.
தேவா என்ற இந்தி படத்திலும் சூர்யாவின் 44 வது படத்திலும் தளபதி விஜய்யின் 69வது படத்தில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்துள்ளார்.