புஷ்பாவில் சமந்தா இடத்தை பிடித்த 37 வயது நடிகை..

புஷ்பாவில் சமந்தா இடத்தை பிடித்த 37 வயது நடிகை..

அல்லு அர்ஜுன் - சுகுமார் கூட்டணியில் 2021ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புஷ்பா. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தை டிசம்பர் மாதம் வெளியிடவுள்ளனர்.

புஷ்பாவில் சமந்தா இடத்தை பிடித்த 37 வயது நடிகை.. இவர் நடித்த படம் 800 கோடி ரூபாய் வசூலாம் | Popular Actress To Replace Samantha In Pushpa 2பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் புஷ்பா இரண்டாம் பாகம் திரைப்படத்தில் சமந்தா நடமாடுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. எப்படி முதல் பாகத்தில் ஊ சொல்றியா மாமா பாடல் சூப்பர்ஹிட்டானதோ, அதே போல் இரண்டாம் பாகத்திலும் ஒரு பாடல் இருக்கிறது.

ஆனால், அந்த பாடலில் சமந்தா நடனமாடவில்லை என முடிவு செய்துள்ளார். அதனால் அவருக்கு பதிலாக வேறு எந்த நடிகையை நடனமாட போகிறார் என கேள்வி எழுந்த நிலையில், பூஜா ஹெக்டே, திஷா பாட்னி, ஜான்வி கபூர் மற்றும் த்ரிப்தி டிம்ரி என பல நடிகைகளின் பெயர்கள் கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தற்போது பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரிடம் இதற்கான பேச்சு வார்த்தையை படக்குழு நடத்தி வருகிறார்கள் என சொல்லப்படுகிறது. புஷ்பா 2 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், பாடல் காட்சியும் இதனுடன் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புஷ்பாவில் சமந்தா இடத்தை பிடித்த 37 வயது நடிகை.. இவர் நடித்த படம் 800 கோடி ரூபாய் வசூலாம் | Popular Actress To Replace Samantha In Pushpa 2நடிகை ஷ்ரத்தா கபூர் சோலோ ஹீரோயினாக நடித்து வெளிவந்த ஸ்ட்ரீ 2 திரைப்படம் உலகளவில் ரூ. 800 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் அளவில் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News