நீ அவரைத்தான் திருமணம் செய்யணும்.. கண்டிஷனுக்கு சாய்பல்லவி கொடுத்த Reply

நீ அவரைத்தான் திருமணம் செய்யணும்.. கண்டிஷனுக்கு சாய்பல்லவி கொடுத்த Reply

 "நீ அவரைத்தான் திருமணம் செய்யணும்.. " என்று கண்டிஷன் போட்ட அப்பாவுக்கு நடிகை சாய்பல்லவி கொடுத்த பதில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பிரபல தொலைக்காட்சியில் நடன கலைஞராக அறிமுகமாகியவர் தான் நடிகை சாய்பல்லவி.

இதன் பின்னர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான “ப்ரேமம்” படத்தின் மூலம் மலர் டீச்சராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

நீ அவரைத்தான் திருமணம் செய்யணும்.. கண்டிஷனுக்கு சாய்பல்லவி கொடுத்த Reply | Sai Pallavi Talks About Her Marriage At Interviewஇதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்து விட்டன. அந்த வகையில் இவர் நடிப்பில் தமிழில் NGK, மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் வெளியாகின. மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

கவர்ச்சியை தள்ளி வைத்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் சாய்பல்லவி வித்தவுட் மேக்கப்பில் தான் நிறைய படங்கள் நடித்திருக்கிறார்.

நீ அவரைத்தான் திருமணம் செய்யணும்.. கண்டிஷனுக்கு சாய்பல்லவி கொடுத்த Reply | Sai Pallavi Talks About Her Marriage At Interviewஇந்த நிலையில், சாய்பல்லவி திருமணம் பற்றி பேசிய அப்பாவுக்கு அவர் கொடுத்த பதிலை பேட்டியில் ஓபனாக பகிர்ந்துள்ளார்.

அதாவது, “ நான் வயதுக்கு வந்தவுடன், நீ ஒரு படுகர் இனத்தை சேர்ந்தவரைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். எனது கிராமத்தில் படுகர் இனம் இல்லாமல் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டால் நல்லது, கெட்டது இப்படி என்ன நடந்தாலும் சொல்லமாட்டார்கள்.

நீ அவரைத்தான் திருமணம் செய்யணும்.. கண்டிஷனுக்கு சாய்பல்லவி கொடுத்த Reply | Sai Pallavi Talks About Her Marriage At Interviewநான் சினிமாவுக்கு வந்த பின்னர் அப்பா என்னிடம், நீ படுகர் இனத்தில் இருப்பவரைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும். இது தான் நம்முடைய கலாச்சாரம் என்றார். எனது அப்பா அப்படி கூறினாலும் அவர் அந்தளவு இல்லை. அதற்கு நான், “ உங்க கலாசாரத்துக்காக நீங்கள் விரும்புவதை எல்லாம் என்னால் செய்ய முடியாது. அது ரொம்பவே தவறு என்றேன்" என ஓபனாக கூறியுள்ளார்.

இந்த செய்தி சாய் பல்லவி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக சென்றுக் கொண்டிருக்கின்றது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் சாய்பல்லவி தங்கை- பூஜா திருமணம் விமர்சையாக நடந்து முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.   

LATEST News

Trending News