அப்படியொரு பிரச்சனையில் வெள்ளைக்கொடி காட்டிய நடிகை .. முடிந்துபோன வழக்கு..
முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா தான், தென்னிந்திய சினிமாவில் ஹாட் டாப்பிக் நடிகையாக திகழ்ந்து வருகிறார். கோட் படத்தில் விஜய்யுடன் மட்ட என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
அப்பாடலுக்காக திரிஷா 50 முதல் 80 லட்சம் வரை சம்பளமாக பெற்றிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் பல வழக்குகளை சந்தித்து வருகிறார். சென்னை செனடாப் ரோடு 2ஆம் வீதியில் இருக்கும் திரிஷாவின் வீடு ஏற்கனவே கட்டப்பட்டுள்ளது. இந்த வீட்டை 2018ல் திரிஷா வாங்கியிருக்கிறார்.
இந்த வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் வீட்டை 2023ல் மெய்யப்பன் என்பவர் வாங்கி, ஏற்கனவே கட்டப்பட்ட வீட்டை இடித்துவிட்டு புதிதாக கட்டுமானப்பணியை மேற்கொண்டிருக்கிறார்.
இவ்விரு வீட்டிற்கும் பொதுவாக இருந்த மதில் சுவர் இடிக்கக்கூடிய சூழலில் மதில் சுவரை இடிக்க நிரந்தரத்தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகை திரிஷா உரிமையியல் வழக்கு தொடர்ந்தார். ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது பொதுவான மதில் சுவரை இடிக்க இடைக்கால தடைவிதித்தா நீதிபதி சதீஷ் குமார்.
இதனையடுத்து இந்த வழக்கு சமீபத்தில் நீதிபதி டீக்காரமன் முன் விசாரணைக்கு வந்தபோது நடிகை திரிஷா தரப்பிலும் எதிர் தரப்பிலும் பிரச்சனையை இருதரப்பினரும் நீதிமன்றத்திற்கு வெளியிலேயே சமரசமாக பேசி தீர்க்கப்பட்டதாக தெரிவித்தனர்.
மேலும் சமரசம் குறித்த அறிக்கையையும் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டு வழக்கை நீதிமதி முடித்து வைத்தும் திரிஷா செலுத்திய நீதிமன்ற கட்டணத்தையும் திருப்பி அளிக்க பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.