விஜய்யிடம் வாய்ப்பு கேட்டனா..அந்த ஆசை எனக்கு இல்லை.. கோபத்தில் சிவந்த நடிகை சிம்ரன்..
90ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகையாக திகழ்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து பிரபலமானவர் நடிகை சிம்ரன். பல ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கும் நடிகை சிம்ரன், அந்தகன் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை சிம்ரன் தன் கணவர் தயாரிப்பில் உருவாகவுள்ள ஒரு படத்தில் முக்கிய ரோலில் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த அறிவிப்புக்கு பின் யூடியூப் சேனல் ஒன்றில் கணவர் தயாரிப்பில் சிம்ரன் நடிக்கும் படத்தில் நடிக்க முன்னணி நடிகர் மறுத்துவிட்டதாக வதந்திகளை பரப்பினர்.
இதனால் ஆவேசமான நடிகை சிம்ரன், இப்படிப்பட்ட விஷயங்களை எப்படி பேசுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை என்றும் ஒரு நடிகையாக நான் சாதிக்க வேண்டியதை பல ஆண்டுகளுக்கு முன் சாதித்துவிட்டேன்.
இப்போது என்னுடைய இலக்கு வேறு, என் குடும்ப என் வாழ்க்கை வேறு என குறுகிய வட்டாத்தில் இருக்கும் என்னை பற்றி பேசுவதை உடனே நிறுத்துங்கள். நான் எந்த பெரிய ஹீரோக்களுடனும் நடிக்க ஆசைப்படவில்லை. ஒரு பெண்ணாக எனது எல்லைகள் எனக்கு தெரியும்.
சமூகவலைத்தளங்களில் பல ஆண்டுகளாக என்னை வேறு ஒருவருடன் இணைத்து பேசுவதைப்பார்த்து அமைதியாக இருந்தேன். ஆனால் சுயமரியாதை முக்கியம். ஸ்டாப் என்ற பவர்ஃபுல்லான வார்த்தையை இப்போது சொல்வது சரியாக இருக்கும்.
இதுபோன்ற வதந்திகளை பரப்புவதை நிறுத்திக்கொள்ளுங்கள் பொய்யான வதந்திகளை பரப்புவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காட்டமாக ஒரு பதிவினை பகிர்ந்திருக்கிறார் நடிகை சிம்ரன்.