ஆர்த்தியின் டார்ச்சர்...ஜெயம் ரவி - கெனிஷா நெருக்கமான உறவு உண்மைதான்.. பிரபலம் ஓப்பன் டாக்...
முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஜெயம் ரவி, சில வாரங்களுக்கு முன் தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறி ஒரு அறிக்கை வெளியிட்டார். இதுகுறித்து ஆர்த்தி அது அவரது தனிப்பட்ட முடிவு, அதனால் நானும் என் குழந்தைகளும் கஷ்டப்படுவதாக கூறி அறிக்கை வெளியிட்டார்.
இதுகுறித்து கோலிவுட் பக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாடகி ஒருவரும் ஜெயம் ரவி தொடர்பில் இருப்பதாக கூறி சில தகவல்கள் வெளியாகியது. நடிகர் ஜெயம் ரவி, நிரூபர்களை சமீபத்தில் சந்தித்து விவாகரத்து மற்றும் பாடகியுடன் தொடர்புபடுத்தி பேசுவது குறித்து விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் பத்திரிக்கையாளர் அந்தணன் அளித்த பேட்டியொன்றில், ஜெயம் ரவி - கெனிஷா இணைந்திருக்கும் புகைப்படத்தை வைத்து கிளம்பிய வதந்தியை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அதேசமயம் இதுதொடர்பாக அவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது அதில் ஓரளவுக்கு உண்மை இருப்பதாகத்தான் சொல்கிறாரள். முதல் இந்த விவகாரத்தில் ஆர்த்தி தான் டார்ச்சர் செய்தார்.
அதனால் ரவி வெளியே வந்துவிட்டார் என்று நானே சொல்லியிருக்கிறேன். ஆனால் இப்போது விசாரித்தபோது அந்தப் பாடகியுடன் ரவிக்கு நெருக்கமான உறவு இருக்கிறது. இருவரும் கோவாவுக்கு சென்று தங்கியிருப்பதாக சொல்கிறார்கள் ரவியின் காரை கோவாவில் கெனிஷா பயன்படுத்தியதை ஆர்த்தி தரப்பு வெளியிட்டு இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.
அது நிச்சயம் இருக்குமில்லையா? ஏனெனில் முழு காரணம் ஆர்த்தி தான் என்று சொல்லப்படும் போது நான் மட்டும் காரணமில்லை, ரவி தரப்பிலும் தவறு இருக்கிறது என்று ஆர்த்தி பொதுவெளிக்கு கொண்டு வருகிறார்.
இதில் குஷ்பூவின் ரோல்தான் முக்கியமானது. ஏனென்றால் ஆர்த்தி - ரவி காதலுக்கும் திருமணத்திற்கும் அவர்தான் காரணம் . அவர் கீழே இறங்கி வந்து இரு தரப்பிலும் பேச வேண்டும், அவர் இப்போ எங்கே என்று தெரியவில்லை என்று அந்தணன் ஓப்பனாக பேசியிருக்கிறார்.