அவங்களை செருப்பால அடிக்கணும்.. மணிமேகலைக்கு நடந்த கொடுமை!! கொந்தளித்த வெங்கடேஷ் பட்..

அவங்களை செருப்பால அடிக்கணும்.. மணிமேகலைக்கு நடந்த கொடுமை!! கொந்தளித்த வெங்கடேஷ் பட்..

கடந்த ஒரு வார காலமாக சமுகவலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது குக் வித் கோமாளி சீசன் 5ல் பிரியங்காவிற்கும் மணிமேகலைக்கும் ஏற்பட்ட பிரச்சனைதான்.

மணிமேகலை, பிரியங்கா தன் வேலையில் தலையிட்டதாலும் சில கருத்துவேறுபாடுகளால் குக் வித் கோமாளியில் இருந்து விலகினார். இதுகுறித்து யார்மீது தவறு என்றும் விஜய் டிவி பிரபலங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.

அவங்களை செருப்பால அடிக்கணும்.. மணிமேகலைக்கு நடந்த கொடுமை!! கொந்தளித்த வெங்கடேஷ் பட்.. | Venkatesh Bhatt Has Spoken Priyanka Manimegalaiதற்போது முன்னாள் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவரும் டாப்பு குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சியின் நடுவருமான வெங்கடேஷ் பட், மணிமேகலை - பிரியங்கா பிரச்சினை குறித்து பேசியிருக்கிறார். அதில், இருவரின் சண்டையை நான் பார்க்கும்போது நம்ம வீட்டில் உள்ள இரு பெண்கள் எப்படி சண்டை போடுவார்களோ அதுப்போலத்தான் இவர்கள் சண்டை போடுகிறார்கள் என்று நினைத்தேன். இருவருமே ரொம்பவும் கஷ்டப்பட்டதால் தான் இன்று இந்த நிலைக்கு வந்து இருக்கிறார்கள்.

மணிமேகலை வீட்டைவிட்டு வெளியே வந்து பல போராட்டங்களை சந்தித்து சமுகவலைத்தளங்களில் இவ்வளவு பெரிய ஆளாக மாறியிருக்கிறார். அதேபோல் பிரியங்காவும் அவருடைய திறமையால் எல்லா நிகழ்ச்சியிலும் தனித்துவமாக நடத்திக்காட்டி வருகிறார்.

அவங்களை செருப்பால அடிக்கணும்.. மணிமேகலைக்கு நடந்த கொடுமை!! கொந்தளித்த வெங்கடேஷ் பட்.. | Venkatesh Bhatt Has Spoken Priyanka Manimegalaiஅவர்கள் இருவரின் பிரச்சனை சின்னது, ஆனால் இதை பயன்படுத்தி சமுக வலைத்தளங்களில் சிலர் வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். அதிலும் ஒருசில தாத்தாக்கள் கூட ஏதோ பக்கத்தில் இருந்து பார்த்தது போல் அது இது என்று பிரியங்காவை பற்றியும் மணிமேகலை பற்றியும் அவர்களுடைய கடந்தகால வாழ்க்கையை பற்றியும் அசிங்கமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த மாதிரியானவர்களை செருப்பால் அடிக்க வேண்டும். ஒரு பெண்ணை பற்றி தவறாக பேசுறவனை எல்லாம் செருப்பாலே அடிக்கணும் என்று கண்டபடி திட்டித்தீர்த்து பேசியிருக்கிறார் வெங்கடேஷ் பட்.

LATEST News

Trending News