மனைவியுடன் விவாகரத்து பிரச்சனை... மகன்களுக்காக அட்ஜெஸ்ட் செய்து போகும் நடிகர் ஜெயம் ரவி..

மனைவியுடன் விவாகரத்து பிரச்சனை... மகன்களுக்காக அட்ஜெஸ்ட் செய்து போகும் நடிகர் ஜெயம் ரவி..

முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஜெயம் ரவி, சில வாரங்களுக்கு முன் தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறி ஒரு அறிக்கை வெளியிட்டார். இதுகுறித்து ஆர்த்தி அது அவரது தனிப்பட்ட முடிவு, அதனால் நானும் என் குழந்தைகளும் கஷ்டப்படுவதாக கூறி அறிக்கை வெளியிட்டார்.

மனைவியுடன் விவாகரத்து பிரச்சனை... மகன்களுக்காக அட்ஜெஸ்ட் செய்து போகும் நடிகர் ஜெயம் ரவி.. | Only Silence For My Sons Jayam Ravi Divorce Issuesஇதுகுறித்து கோலிவுட் பக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாடகி ஒருவரும் ஜெயம் ரவி தொடர்பில் இருப்பதாக கூறி சில தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி, நிரூபர்களை சமீபத்தில் சந்தித்து விவாகரத்து மற்றும் பாடகியுடன் தொடர்புபடுத்தி பேசுவது குறித்து விளக்கம் அளித்திருந்தார்

அதில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது ஜெயம் ரவியின் மகன்கள் பற்றி தான். நான் எடுத்த விவாகரத்து முடிவு அவருக்கு தெரியாது என்று கூறுவது தவறாக தோன்றுகிறது.

ஏற்கனவே இரண்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். அதை பெற்றுக்கொண்டதாகவும் எனக்கு தகவல் வந்தது. அவர்கள் தரப்பில் பேசினார்கள். எங்கள் வீட்டில் வைத்தும் பஞ்சாயத்து நடந்தது.

மனைவியுடன் விவாகரத்து பிரச்சனை... மகன்களுக்காக அட்ஜெஸ்ட் செய்து போகும் நடிகர் ஜெயம் ரவி.. | Only Silence For My Sons Jayam Ravi Divorce Issuesஇவ்வளவு நடந்த பின்பும் எனக்கு தெரியாது என்று சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. தெரியாமல் எப்படி இருக்க முடியும் எனக்கு புரியவில்லை. நான் தொடர்பு கொள்ளமுடியாத இடத்தில் இருந்ததாக கூறுவது சரியல்ல.

என் மகன்களுடன் தான் இருந்தேன், மகன்களுக்காக அமைதியாக இருக்கிறேன். சட்டரீதியாக செல்கிறேன் என்று ஜெயம் ரவி காட்டமாக பேசியிருக்கிறார். யாரிடம் உண்மை இருக்கிறது என்று நீதிமன்றம் சென்றப்பின் தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES