பெரிய இடத்தை கைக்குள் வைத்திருக்கும் அம்மணி.. அட்ஜஸ்ட்மென்ட் தான் காரணமா.
பிரபல சேனலில் புகைந்து கொண்டிருக்கும் பிரச்சனை தான் இப்போது அதிர்வலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. சீனியர் என்ற பெயரில் தொகுப்பாளினி இதுவரை போட்ட ஆட்டம் தற்போது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.
சேனல் தரப்பும் அவருக்கு ஆதரவாக இருப்பது தான் இப்போது பிரச்சனைக்கு முக்கிய காரணம். இதனால் பாதிக்கப்பட்ட பிரபலம் தற்போது நாசுக்காக விஷயத்தை கசிய விட்டு பெரும் பிரச்சனைக்கு அஸ்திவாரம் போட்டுள்ளார்.
இதனால் பதறிப்போன சேனல் தரப்பு இப்போது அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கி இருக்கிறதாம். அதேபோல் எதற்காக அந்த பெண்ணுக்கு இவ்வளவு சலுகை இதில் ஏதேனும் விஷயம் இருக்கிறதா என்ற ரீதியிலும் கேள்விகள் எழுந்துள்ளது.
அதைப்பற்றி சினிமா விமர்சகர்கள் விசாரித்ததில் சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறியிருக்கின்றனர். அதாவது பெரிய இடத்தை தன் கைக்குள் வைத்திருக்கவும் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தவும் அந்த அம்மணி ஏகப்பட்ட வேலைகளை பார்த்திருக்கிறாராம்.
அதிலும் பிரபலம் ஒருவர் இதில் அட்ஜஸ்ட்மென்ட் விவகாரம் இருக்கும் என ஆணித்தரமாக அடித்து சொல்கிறார். அதுமட்டுமின்றி வாய்ப்பு கேட்டு வரும் சில இளம் பெண்களை கூட பெரும்புள்ளிகளிடம் அனுப்பி வைக்கும் வேலையும் நடந்திருப்பதாக அவர் கூறுகிறார்.
இது இப்போது அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்டவர் இந்த விவகாரத்தில் வாய் திறக்காமல் இருக்கிறார். ஆனால் இது பற்றிய ஆலோசனைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. நிச்சயம் தன் மீது பங்கம் வராதபடி இந்த பிரச்சனையை அவர் வேறு பக்கம் திசை திருப்புவார் என்கின்றனர்.