ஆர்த்தியுடன் விவாகரத்து... பாடகியுடன் தொடர்பு!! விளக்கம் அளித்த நடிகர் ஜெயம் ரவி..

ஆர்த்தியுடன் விவாகரத்து... பாடகியுடன் தொடர்பு!! விளக்கம் அளித்த நடிகர் ஜெயம் ரவி..

முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஜெயம் ரவி, சில வாரங்களுக்கு முன் தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறி ஒரு அறிக்கை வெளியிட்டார். இதுகுறித்து ஆர்த்தி அது அவரது தனிப்பட்ட முடிவு, அதனால் நானும் என் குழந்தைகளும் கஷ்டப்படுவதாக கூறி அறிக்கை வெளியிட்டார். இதுகுறித்து கோலிவுட் பக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாடகி ஒருவரும் ஜெயம் ரவி தொடர்பில் இருப்பதாக கூறி சில தகவல்கள் வெளியாகியது.

ஆர்த்தியுடன் விவாகரத்து... பாடகியுடன் தொடர்பு!! விளக்கம் அளித்த நடிகர் ஜெயம் ரவி.. | Dont Talk About That Girl Jayam Ravi Aarti Divorceஇந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி, நிரூபர்களை சமீபத்தில் சந்தித்து விவாகரத்து மற்றும் பாடகியுடன் தொடர்புபடுத்தி பேசுவது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார். நான் எடுத்த விவாகரத்து முடிவு வருத்தம் அளிப்பதாக இருந்தாலும் வேறுவழியில்லை. இது என் வாழ்க்கையில் ஒரு வேகத்தடை மாதிரிதான். ஒன்றை மாதங்களுக்கு முன் கோர்ட்டுக்கு சென்றுவிட்டேன். அப்போதே விவாகரத்து செய்யப்போகிறேன் என்று கிசுகிசுக்கள் வந்தன.

நான் எடுத்த விவாகரத்து முடிவு அவருக்கு தெரியாது என்று கூறுவது தவறாக தோன்றுகிறது. ஏற்கனவே இரண்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். அதை பெற்றுக்கொண்டதாகவும் எனக்கு தகவல் வந்தது. அவர்கள் தரப்பில் பேசினார்கள். எங்கள் வீட்டில் வைத்தும் பஞ்சாயத்து நடந்தது. இவ்வளவு நடந்த பின்பும் எனக்கு தெரியாது என்று சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. தெரியாமல் எப்படி இருக்க முடியும் எனக்கு புரியவில்லை. நான் தொடர்பு கொள்ளமுடியாத இடத்தில் இருந்ததாக கூறுவது சரியல்ல. என் மகன்களுடன் தான் இருந்தேன், மகன்களுக்காக அமைதியாக இருக்கிறேன். சட்டரீதியாக செல்கிறேன்.

ஆர்த்தியுடன் விவாகரத்து... பாடகியுடன் தொடர்பு!! விளக்கம் அளித்த நடிகர் ஜெயம் ரவி.. | Dont Talk About That Girl Jayam Ravi Aarti Divorceமேலும் பேசிய ஜெயம் ரவி, பாடகியுடன் என்னை இணைத்து பேசுவது தவறு. அந்த பொண்ணுக்கு அம்மா, அப்பா இல்லை. அவருடன் இணைத்து பேசினால் அது பேசியவர்களுக்குத்தான் அசிங்கம். அந்த பெண் லைசன்ஸ் பெற்ற சைக்காலஜிஸ்ட். நிறைய பேருக்கு உதவிகள் செய்து இருக்கிறார். மன அழுத்தத்தில் இருந்த எத்தனையோ பேரை காப்பாற்றி இருக்கிறார். அவரை என்னோடு இணைத்து பேசுவது ரொம்ப தவறு.

ஆர்த்தியுடன் விவாகரத்து... பாடகியுடன் தொடர்பு!! விளக்கம் அளித்த நடிகர் ஜெயம் ரவி.. | Dont Talk About That Girl Jayam Ravi Aarti Divorceநான் அவரோடு ஒரு ஆன்மீக மையம் ஆரம்பிக்க முடிவு செய்தேன். அதை தகர்ப்பதற்காக இப்படி பேசப்படுகிறதா என்று புரியவில்லை. ஏற்கனவே வேறொரு பெண்ணுடன் தொடர்புபடுத்தி பேசினார்கள், அவருக்கு நிச்சயமாகி போய்விட்டார்.

அடுத்து என்னை மார்பிங் செய்து போட்டோ வெளியிடுவார்களா என்று தெரியவில்லை. அம்மா, அப்பா என் முடிவின்படியே போகிறார்கள். நான் சுற்றுகிற நபர் இல்லை. என் பிரச்சனையில் ஒரு நாள் உண்மை வரும். அது கோர்ட்டில் வரும். நான் சட்டத்தை நம்புகிறேன். நியாயம் கிடைக்கும்.

ஆர்த்தியுடன் விவாகரத்து... பாடகியுடன் தொடர்பு!! விளக்கம் அளித்த நடிகர் ஜெயம் ரவி.. | Dont Talk About That Girl Jayam Ravi Aarti Divorceமகன்களுடன் சேர்ந்துதான் இருக்கிறேன். நோட்டீஸ் அனுப்பும் முன் மூத்த மகனிடம் விஷயத்தை சொன்னேன். காலை உடைத்து கையை உடைத்து எல்லாமே நான் சம்பாதித்தது. மக்கள் கொடுத்தது. என் இமேஜை அவ்வளவு சீக்கிரம் உடைக்க முடியாது. ஒருநாள் உண்மை தெரியவரும் போது சாணியை திருப்பி அடிப்பார்கள் என்று ஜெயம் ரவி ஓப்பனாக பேசியிருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES