குற்ற உணர்ச்சி எல்லாம் இருக்கப்போவது இல்லை!! திருமணம் குறித்து நடிகை சமந்தா பேட்டி..
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் வரை சென்று டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. சிடெடல் படத்தினை தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய்யுடன் 69வது படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவலும் இணையத்தில் வெளியாகியது.
நடிகை சமந்தா விவாகரத்துக்கு பின் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அன்றாட வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்தித்து வந்தார். தீவிர சிகிச்சைக்காக பல இடங்களுக்கு சென்று வந்த சமந்தா, மருத்துவ ஆலோசனைப்படி பல சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார்
நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, 4 ஆண்டுகளில் கருத்துவேறுபாடு ஏற்பட விவாகரத்து செய்து பிரிந்தார். விரைவில் நாக சைதன்யாவுக்கும் நடிகை சோபிதாவுக்கு திருமணம் நடக்கவுள்ளது. இந்நிலையில் சமந்தா ஒரு பழைய பேட்டியொன்றில், நான் அவருக்கு 100 சதவீதத்தை திருமணத்தில் கொடுத்தேன்.
ஆனால் அது பலனளிக்கவில்லை. எனவே நான் செய்யாத ஒரு காரியத்துக்காக என்னை நானே அடித்துக்கொள்ளவோ நான் குற்ற உணர்வில் இருக்கப்போவதோ இல்லை என்று ஓப்பனாக பேசியிருக்கிறார்.