பலமுறை திருமணம் செய்து வெச்சிட்டாங்க!! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தனுஷ் பட நடிகை.
கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்து தமிழில் சிம்புவுக்கு ஜோடியாக 2004ல் வெளியான குத்து படத்தின் மூலம் அறிமுகமாகினார் நடிகை திவ்யா ஸ்பந்தனா. இப்படம் நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில் கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் போன்ற ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார்.
அதன்பின் சரியான வாய்ப்பு கிடைக்காமல் கன்னட படங்களில் நடிக்க ஆரம்பித்தார். நடிகையாக மட்டும் இல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தார்.
சமீபகாலமாக அவர் குறித்த ஏகப்பட்ட வதந்தி செய்திகள் பரவியது. கடந்த வருடம் கூட ரம்யா இறந்துவிட்டார் என்ற செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. பின் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் செய்திகள் பரவியது.
இந்நிலையில், ரம்யா மீண்டும் திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் பரவியதை அடுத்து அதற்கு மறுப்பு தெரிவித்து ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். எனக்கு பலமுறை மீடியாக்கள் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்.
எத்தனைமுறை என்பதை நான் மறந்தும் விட்டேன். நான் ஒருவேளை உண்மையில் திருமணம் செய்து கொண்டால் நாணே சொல்வேன், அதிகாரபூர்வமற்ற சோர்ஸ்களிடமிருந்து வரும் வதந்திகளை பரப்புவடை நிறுத்துங்கள் என்று கூறியிருக்கிறார் நடிகை ரம்யா ஸ்பந்தனா.