திடீரென என்னுடைய அந்த உறுப்பை பிடித்து அழுத்தினார்.. வெளிப்படையாக பிரபல நடிகரை குறித்து பேசிய நடிகை சோனா..!
கோலிவுட் திரையுலகில் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாக இருப்பவர் சோனா. இவர் பூவெல்லாம் கேட்டுப்பார், ஷாஜஹான் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் பிறகு நடித்த படங்களில் பெரிய அளவில் பெயர் பெறவில்லை. இவர் இருக்குமிடத்தில் சர்ச்சைகளுக்கு என்றுமே பஞ்சமில்லை.
மேலும் தனது வாழ்க்கையைப் பற்றி திரைப்படம் எடுக்க போவதாக சமீபத்தில் கூறியிருந்தார் சோனா. ஆனால் தற்போது வெப் தொடர் எடுக்க போவதாக கூறி வருகிறார். மேலும் வெப் தொடரை எடுத்து விட்டு திரைப்படம் எடுக்க போவதாக கூறியுள்ளார்.
அந்த வெப் தொடருக்கு ஸ்மோக்கிங் என்று பெயரிட்டு சோனாவே இயக்கவும் உள்ளார். அதற்காக சோனா வேடத்தில் நடிக்க நடிகை தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து பேசிய நடிகை சோனா இயக்குனர் வெங்கட் பிரபு அவருடைய பார்ட்டி ஒன்றில் கலந்து கொள்வதற்காக என்னை அழைத்து இருந்தார்.
நான் அங்கு சென்றேன். அங்கே நடிகர் சரணும் இருந்தார். அப்போது போதையில் இருந்த அவர் பாய்ந்து வந்து என்னுடைய மார்பின் மேல் கை வைத்து கசக்கினார். நான் அவரை தடுத்து தள்ளி விட்டேன். அப்போது.. நீ என்னடி சீன் போடுற.. சான்ஸ் காக நிறைய பேர் கூட பண்றது தானே.. என்கூட பண்றதுல என்ன தப்பு.. என்று ஆரம்பித்து மோசமான வார்த்தைகளை உபயோகப்படுத்தி பேச தொடங்கினார்.
நான் அதிர்ந்து போய் விட்டேன். அந்த நேரத்தில் வெங்கட் பிரபு மற்றும் இன்னும் சில நடிகர்கள் வந்து என்னை காப்பாற்றினார்கள். இங்கிருந்து போடா அந்த பக்கம் என்று அவரை இழுத்த சென்று என்னை காப்பாற்றினார்கள்.
நான் மகிழ்ச்சியாக தான் இருந்தேன். ஆனால் நான் சற்று எதிர்ப்பாக்காத நேரத்தில் திடீரென வந்து என்னுடைய மார்பை கசக்கி தொல்லை கொடுத்தார். அந்த நிகழ்வை நான் இப்போது வரை மறக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.