பெரிய இயக்குநர் அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அழைத்தார்!! வெளிப்படையாக பேசிய நடிகை காஜல்..
மலையாள சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் மோகன் லால், ஹேமா கமிட்டி அறிக்கை வெளிவந்த பின் மலையாள நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அந்த சங்கமும் முழுமையாக கலைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பலர் வெளிப்படையாக பேசி வரும் நிலையில் நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான காஜல் பசுபதி ஒருசில கருத்தினை பகிர்ந்துள்ளார். மோகன்லால் ஏன் பதவியை ராஜினாமா செய்தார் என்ற காரணத்தை கூறச் சொல்லுங்கள். சினிமா கனவோடு வரும் பெண்கள் அட்ஜெஸ்ட்மெண்டுக்கு வேறுவழியில்லாமல் ஒத்துக் கொள்கிறார்கள்.
என்னிடம் திறமை இருக்கும் நான் அட்ஜெஸ்ட்மெண்ட் எல்லாம் செய்யமாட்டேன். வாய்ப்பு வரும்வரை காத்திருப்பேன். அதுவும் வெள்ளையாக இருந்துவிட்டால் தேடி வாய்ப்புகள் வரும், நான் கருப்பு, அதுவும் இல்லாமல் ரூடா கேள்வி கேட்பேன் என்பதால் எனக்கு படவாய்ப்பு வருவதில்லை.
திரையில் பார்த்து பிரம்மித்துப்போன ஒரு இயக்குநரின் சீரியலில் கெஸ்ட் ரோலில் நடிக்க சென்றேன். அப்போது அவர் கையை குலுக்கி விரலால் சுரண்டி அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ஓகாவா என்று சிக்னல் கொடுத்தார்.
அது எனக்கு புரிந்துவிட்டது. இருந்தாலும் எதுவும் பேசாமல் இந்த பத்துநாள் ஷூட்டிஞ்க் போய்விடும் என்று அமைதியாக இருந்துவிட்டேன் இப்படி அசிங்கமாக பெரிய இயக்குநர்களே நடந்து கொள்கிறார்கள் என்று காஜல் தெரிவித்துள்ளார்