பொது இடத்தில் நடிகையிடம் அப்படி நடந்துக்கொண்ட ரசிகர்.. திடீர் நிகழ்வால் பரபரப்பு!.
எல்லா காலகட்டங்களிலுமே தமிழில் கேரள நடிகைகளுக்கு இருக்கும் வரவேற்பு என்பது அதிகமாக தான் இருந்து வருகிறது. ஏனெனில் மலையாள பெண்கள் தனித்துவமான அழகைக் கொண்டவர்கள் என்பது வெகு காலங்களாகவே ஒரு பேச்சாக இருந்து வருகிறது.
அதற்கு தகுந்தார் போல மலையாளத்திலிருந்து வரும் நடிகைகளுக்கும் வரவேற்பு அதிகமாகவே இருந்து வருகிறது. ஆனாலும் மற்ற மொழிகளுடன் ஒப்பிடும் பொழுது மலையாளத்திலிருந்து வரும் நடிகைகள் மிகவும் குறைவானவர்களே என்று கூறலாம்.
தமிழில் அதிக பிரபலமான நஸ்ரியா, அனுபாமா பரமேஸ்வரன் போன்ற நடிகைகள் எல்லாம் மலையாளத்தை பின்புலமாக கொண்டவர்கள் தான். இப்படி இன்னும் மலையாளத்தை பின்புலமாக கொண்டும் தெரியாமல் இருக்கும் நடிகைகள் எக்கச்சக்கம். அந்த வகையில் 2013 ஆம் ஆண்டு நிவின்பாலி நடித்த நேரம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அதிக பிரபலம் அடைந்தவர் நடிகை அஞ்சுக்குரியன்.
அஞ்சு குரியனை பொறுத்தவரை மிகவும் அழகாக இருப்பதால் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தன. மலையாளத்தில் தமிழுக்கு முன்பே பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வந்தார் அஞ்சு குரியன்.
நேரம் படத்திற்கு பிறகு இவருக்கு தமிழில் நிறைய வாய்ப்புகள் வரத் துவங்கினர். அதனை தொடர்ந்து சென்னை டு சிங்கப்பூர் என்கிற திரைப்படத்திலும் இவர் நடித்தார். இப்பொழுது அதிகபட்சம் தமிழை விடவும் தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்களில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார் அஞ்சு குரியன்.
அங்கு அவருக்கு வாய்ப்புகளும் அதிகமாகவே இருந்து வருகின்றன பொதுவாக நடிகைகள் வளர துவங்கிய பிறகு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது கடை திறப்பு விழாவில் கலந்து கொள்வது என்று பல விஷயங்களை செய்வது உண்டு.
ஏனெனில் திரைப்படம் மூலமாக கிடைக்கும் வருமானம் மட்டுமல்லாமல் இந்த மாதிரியான வருமானங்களும் அவருக்கு மிக உதவியாக இருக்கும் அந்த வகையில் சமீபத்தில் அஞ்சுகுரியன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்பொழுது அங்கு நிறைய ரசிகர்கள் அவரை பார்ப்பதற்காக வந்திருந்தனர் அங்கிருந்த ரசிகர் ஒருவர் திடீரென்று கூட்டத்திற்கு நடுவே நடிகை அஞ்சு குரியன் காலில் விழுந்து கண் கலங்கியபடியே அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிகழ்வை சற்றும் எதிர்பார்க்கவில்லை அஞ்சு சூரியன். இருந்தாலும் கூட அதை புரிந்து கொண்டு அந்த இடத்திற்கு தகுந்தார் போல சாதகமாக நடந்து கொண்டார். கண்ணீர் விட்டு அழுத அந்த நபரிடம் காலில் எல்லாம் விழ வேண்டாம் என்று கூறியவர் , அது மட்டுமல்லாமல் அவருக்கு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து மகிழ்வித்து இருக்கிறார் நடிகை அஞ்சு குரியன். இந்த நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிக வைரலாக துவங்கியிருக்கிறது.