நைட் பார்ட்டியில் ஆண் நண்பருடன் குடித்துவிட்டு ஆட்டம்.. எல்லை மீறிப்போன ரிலேஷன் ஷிப்!

நைட் பார்ட்டியில் ஆண் நண்பருடன் குடித்துவிட்டு ஆட்டம்.. எல்லை மீறிப்போன ரிலேஷன் ஷிப்!

சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் நைட் பார்ட்டிக்கு செல்வது, சக நடிகர்களுடன் ஆட்டம் போட்டு சரக்கு அடிப்பது எல்லாம் சாதாரணமான விஷயம் தான். ஆனால், திருமணமாகி கணவர், குழந்தைகள் என வாழ்ந்து வரும் ஒரு நடிகை, நைட் பார்ட்டியே கதி என இருக்கிறாராம். அது மட்டுமில்லாமல், ஆண் நண்பர் ஒருவருடன் நெருக்கமாக பழகி வருவதால் அவரின் கணவர் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் அழகான நடிகை என பெயர் எடுத்த அந்த நடிகை சினிமாவிற்குள் வந்ததில் இருந்தே, சர்ச்சைக்கு குறைவு இல்லாத நடிகையாக தான் இருக்கிறார். இவர், முதல் படத்தில் வாரிசு நடிகரோடு இணைந்து நடித்தார். அதைத் தொடர்ந்து அந்த நடிகரோடு அடுத்தடுத்த படத்தில் நடித்ததால், அந்த நடிகரோடு இணைந்து பேசப்பட்டார். இதனால் உஷாரான அந்த நடிகரின் அப்பா, இனி மேல் அந்த நடிகையோடு நடிக்கக்கூடாது என்று சொல்லிவிட்டார்.

இதைத்தொடர்ந்து, மற்றொரு நடிகருடன் இணைந்து, அந்த ஜோடியை திரையில் பார்ப்பதற்கே ரொம்ப அழகாக இருப்பார்கள். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகக்கூட செய்தி பரவியது. ஆனால், கடைசியில் இது உண்மை இல்லை என்று ஆனது. அதன்பிறகு, தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த தம்பதிகளுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

இந்த நடிகைக்கு ஆரம்பத்தில் இருந்த நைட் பார்ட்டி என்றால் ரொம்ப பிடித்தமான ஒன்றாம். இவருக்கு பட வாய்ப்பு கிடைத்ததே, நைட் பார்ட்டி சென்று தான் என்று சொல்லப்படும் நிலையில், திருமணமாகி குழந்தைகள் பிறக்கும் வரை அடக்கிவாசித்த அந்த நடிகை, தற்போது மீண்டும் நைட் பார்ட்டிக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளாராம். இவரின் கணவருக்கு தற்போது பட வாய்ப்பு சரியாக இல்லாததால், இவராலும் மனைவியை கண்ட்ரோல் பண்ண முடியவில்லையாம்.

அது மட்டுமில்லாமல் நைட் பார்ட்டியில் ஒரு ஆண் நண்பருடன் குடித்துவிட்டு எல்லை மீறி குத்தாட்டமும் போட்டுள்ளார். இந்த விஷயம் , கணவரின் காதுக்கு வர, இதெல்லாம் ஒரு பிரச்சனையா சினிமாவில் இது சகஜம் என்று சொல்லி இருக்கிறார். அது மட்டுமில்லாமல் என் ஆண் நண்பர் பற்றி பேசவேக் கூடாது என்று ஆர்டரும் போட்டு இருக்கிறார். இதனால், அப்செட்டான கணவர் இனி மேல் செட் ஆகாது விவாகரத்து செய்து பிரிந்துவிடலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டாராம். விரைவில் இந்த ஜோடியின் விவாகரத்து அறிவிப்பும் வெளிவரலாம்.

LATEST News

Trending News