விரைவில் பிரசாந்துக்கு திருமணம்..குடும்ப பாங்கான மணப்பெண்ணை தேடும் அம்மா.. ஓப்பன் டாக் தியாகராஜன்!!
90ஸ் கிட்ஸ்களின் சாக்லெட் பாயாக திகழ்ந்த நடிகர்களில் ஒருவர் நடிகை பிரசாந்த், பல ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். Vinaya Vidheya Rama என்ற படத்தில் ராம் சரணின் அண்ணாக நடித்தப்பின் அந்தகன் என்ற படத்தில் நடிகரும் பிரசாந்தின் அப்பாவுமான தியாகராஜன் இயக்கத்தில் நடித்தார். கிட்டத்தட்ட படம் ஆரம்பிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு பின் ஆகஸ்ட் 9 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது.
சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரகனி, யோகி பாபு, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தின் நடித்துள்ளனர். படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில் அந்தகன் படத்தின் வெற்றி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
அப்போது கலந்து கொண்டு பேசிய இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், படம் வெற்றி பெற்றால் தான் பிரசாந்த் திருமணம் என்று என்னிடம் தியாகராஜன் சார் சொன்னார். இப்போது படம் வெற்றி பெற்றுவிட்டது, நீங்களே வந்து சொல்லுங்க எப்போ என்று என கே எஸ் ரவிக்குமார் கூறியிருக்கிறார்.
அதன்பின் பேசிய தியாகராஜன், எனக்கு ரொம்ப மன வருத்தமான விஷயம் என்னவென்றால், பிரசாந்தின் திருமண வாழ்க்கைதான். தினமும் பிரசாந்தின் அம்மாவாகட்டும் நானாகட்டும் அதை பற்றி யோசிக்காத நாளே கிடையாது.
அவருக்கு பெண் தீவிரமாக தேடிட்டுதான் இருக்கிறோம், ஒரு நல்ல குடும்பபாங்கான பெண்ணை பிரசாந்த் அம்மா தேடிட்டு இருக்கிறார்கள். மிக விரைவில் திருமணம் நடக்கும், படத்தின் வேலைகளை நிறுத்திவிட்டு பிரசாந்துக்கு கல்யாணம் பண்ணி வைப்பது தான் என் வேலையாக இருக்கும் என்று தியாகராஜன் ஓப்பனாக பேசியிருக்கிறார்.