அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனையில் சிக்கிய 5 நடிகைகள்!! திரையுலகின் இருண்ட பக்கங்கள்..
சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டுமானால் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சொல்லும் கலாச்சாரம் தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது. அப்படி தன்னை அழைத்தார்கள் என்று இளம் பெண்கள் முதல் டாப் நடிகைகள் வரை தற்போது வெளிப்படையாக கூறி வருகிறார்கள். அப்படி அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனையில் சிக்கிய அதை வெளிப்படையாக பேசிய முக்கிய நடிகைகள் யார் என்று பார்ப்போம்..
சீரியலில் ஒருசில படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஜீவிதா சமீபத்திய பேட்டியொன்றில் ஒருசில படங்களில் வாய்ப்பு கிடைத்த நிலையில், அதற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கொக்கிப்போட்டதாக கூறியதால் அப்படிப்பட்ட வாய்ப்பு வேண்டாம் என்று சீரியல் பக்கம் திரும்பி விட்டதாக கூறியிருந்தார்.
சீரியல் நடிகை சம்யுக்தா அளித்த பேட்டியில், திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்றால் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்கிற எழுதப்படாத நிபந்தனையை சிலர் இவரிடம் கேட்க சீரியலே போது என்ற முடிவுக்கு வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி, ஒரு படத்தில் நடிக்க கதை கூறுவதாக கூறி அட்ஜெஸ்ட்மெண்ட்டிற்கு அழைத்ததாக வெளிப்படையாக கூறியிருந்தார்.
குணச்சித்திர நடிகை தாரணி, இளம் வயதில் சில படங்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தது, ஆனால் வாய்ப்பு வேண்டுமானால், அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று கூறியதால் சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டார். தற்போது சீரியலில் நடித்து வருகிறார்.
நடிகை ரெஜினா கேசன்ரா அளித்த பேட்டியொன்றில், ஆரம்பத்தில் சம்பளத்தில் தான் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சொல்கிறார்கள் என்று நினைத்தவர் ஒரு கட்டத்தில் அது வேறொரு காரணமாக இருப்பதை அறிந்து பட வாய்ப்பை நிராகரித்ததாகவும் கல்லூரி படிக்கும் போது ஒரு நபர் தன் முன் வந்து தன்னுடைய உதட்டை பிடித்து மோசமாக நடந்து கொண்டதாகவும் ரெஜினா தெரிவித்துள்ளார்.