ஒரு மணி நேரத்திற்கு என்ன ரேட்டு.. கேள்விக்கு இளம் நடிகை கொடுத்த அதிர்ச்சி பதில்..!

ஒரு மணி நேரத்திற்கு என்ன ரேட்டு.. கேள்விக்கு இளம் நடிகை கொடுத்த அதிர்ச்சி பதில்..!

சமூக வலைதளங்களில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் பாலியல் சீண்டல்கள் உள்ளிட்டவை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது .

குறிப்பாக திரைப்படங்களில் நடிக்கும் போது இயக்குனர், தயாரிப்பாளர் இப்படி பல பேருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் திரைப்பட வாய்ப்புகளை தங்களுக்கு கிடைக்கிறது என பல நடிகைகள் வெளிப்படையாக வந்து பேட்டிகள் கூறுவதை நாம் பார்த்திருக்கிறோம்.

அந்த வகையில் திரைப்படத்தையும் தாண்டி பொது வெளியில் கூட சராசரி மக்களால் கூட நடிகைகளுக்கு பாலியல் சீண்டல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அது உண்மை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது ஒரு பிரபல சீரியல் நடிகைக்கு மர்ம ஆசாமி ஒருவர் தொடர்ந்து பாலியல் டார்ச்சர் கொடுத்து வந்த செய்தி பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது .

பிரபல சீரியல் நடிகை காயத்ரி அருண் மலையாள சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஏசியா நெட்டில் ஒளிபரப்பான பரஸ்பரம் என்ற தொடரில் நடித்து பெரும் புகழ்பெற்றார்.

அது அவருக்கு மிகப்பெரிய அடையாளமாக அமைந்தது. தொடர்ந்து சீரியல்களில் நடித்து வரும் காயத்ரி அருண் சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படி ஒரு நேரத்தில் தான் அவரது பேஸ்புக் முகவரியில் தினமும் ஒரு ஆசாமி குறுஞ்செய்தி அனுப்பி வந்திருக்கிறார் .

அது மட்டும் இல்லாமல் நீங்கள் ஒரு இரவுக்கு என்னுடன் தங்கினால் ரூபாய் 2 லட்சம் தருகிறேன். ஒரு மணி நேரம் தங்கினாலும் போதும் என தகவல் அனுப்பி முகம் சுளிக்க வைத்திருக்கிறார்.

ரோகன் என்ற அந்த ஆசாமிக்கு நடிகை காயத்ரி அருண் பதிலடி கொடுத்திருக்கிறார். அதாவது உங்கள் தாய் மற்றும் சகோதரிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நான் ஆண்டவனிடம் பிரார்த்திக்கும் போது கேட்டுக்கொள்கிறேன் என்று செருப்படி பதில் கொடுத்திருக்கிறார்.

இப்படி நடிகைகளுக்கு திரைப்படத்துறை தாண்டி பொதுவெளியிலும் மர்ம ஆசாமிகளால் தொடர்ச்சியாக இதுபோன்ற தொல்லைகள் இருந்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

இதையடுத்து அந்த நபரின் பேஸ்புக் முகவரி தேடிச் சென்று காயத்ரி அருணின் ரசிகர்கள் பல பேர் அவரை திட்டி தீர்த்து வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES