அத்தனை பேர் நடுவுல.. அந்த மாதிரி காட்சியில்.. அனுபவம் பற்றி ஓப்பனாக பேசிய நடிகை அஞ்சலி..!
தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை அஞ்சலி. தமிழில் இயக்குனர் ராம் இயக்கிய கற்றது தமிழ் திரைப்படம் மூலமாக அஞ்சலி தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
ஆரம்பத்தில் அஞ்சலி திரைப்படங்களில் நடிக்கும்போது அவருக்கு கொடுத்த கதாபாத்திரங்கள் எல்லாம் கடினமான கதாபாத்திரங்களாக இருந்தன. பொதுவாக முதல் திரைப்படத்திலேயே அவ்வளவு கடினமான கதாபாத்திரத்தை எடுத்து நடிப்பது என்பது அனைவருக்கும் கஷ்டமான காரியம்தான்.
இருந்தாலும் கற்றது தமிழ் திரைப்படத்தில் ஆனந்தி என்கிற அந்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருந்தார் அஞ்சலி. அதனை தொடர்ந்து அவரது நடிப்புக்கு வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து அங்காடித் தெரு என்கிற திரைப்படத்திலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
சென்னை டிநகரில் உள்ள ஜவுளி கடைகளில் தொழிலாளர்களுக்கு நடக்கும் அநீதிகளை வெளிபடுத்தும் விதமாக அந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அஞ்சலி அதிக வரவேற்பை பெற்றார்.
அதற்கு பிறகு அவருக்கு நிறைய திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் அங்காடி தெரு மற்றும் கற்றது தமிழ் மாதிரியான திரைப்படங்களில் இருந்த அளவிற்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரம் என்று அவருக்கு பெரிதாக வேறு படங்களில் கதாபாத்திரங்கள் அமையவில்லை.
இந்த நிலையில் சில நாட்களில் உடல் பருமன் பிரச்சனையால் சினிமாவில் வாய்ப்புகளை இழக்க தொடங்கினார் அஞ்சலி. கலகலப்பு மாதிரியான திரைப்படங்களில் நடிக்கும் போது அவருக்கு உடல் எடை அதிகரித்து இருந்தது.
இதன் காரணமாக சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் குறைய துவங்கின. சில நாட்கள் சினிமாவில் இடைவெளி விட்டு சென்றார் அஞ்சலி. இருந்தாலும் இறைவி, பேரன்பு மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் அஞ்சலி நடித்து கொண்டுதான் இருந்தார்.
இந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்ட அஞ்சலி பிறகு உடல் எடையை வெகுவாக குறைத்து பார்ப்பதற்கு இளம் பெண் போன்ற தோற்றத்தில் மீண்டும் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்தார். தெலுங்கில் ஒரு ஐட்டம் பாடலில் சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தி இருந்தார் அஞ்சலி.
அது அதிக வரவேற்பை பெற்று இருந்தது. தற்சமயம் அதனை தொடர்ந்து மீண்டும் சினிமாவில் வாய்ப்புகளை பெற்று வருகிறார் அஞ்சலி. இந்த நிலையில் சமீபத்தில் பகிஷ்கரனா என்கிற வெப் சீரிஸில் அஞ்சலி நடித்து வருகிறார். இந்த சீரிஸில் நெருக்கமான படுக்கையறை காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து அவர் பேட்டிகளில் கூறும் பொழுது படங்களாக இருந்தாலும் சரி வெப் சீரிஸ்கலாக இருந்தாலும் சரி நெருக்கமான காட்சிகள் என்பது எப்போதும் சிரமமான விஷயமாக தான் இருக்கிறது. ஏனெனில் படப்பிடிப்பு தளத்தில் அவ்வளவு பேருக்கும் மத்தியில் அப்படியான காட்சிகளில் நடிக்கும் பொழுது சிரமமாக இருக்கிறது என்கிறார் அஞ்சலி.