உமா ரியாஸ் மகனுக்கு திருமணம்: மணப்பெண் யார் தெரியுமா?
பிரபல வில்லன் நடிகர் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் கான் தம்பதியின் மூத்த மகனான ஷாரிக் ஹாசனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில், மெஹந்தி பங்ஷன் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.
ஷாரிக் ஹாசன் மரியா ஜெனிஃபர் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இந்த காதல் விவாகாரம் வீட்டுக்கு தெரிந்ததை அடுத்து பெற்றோர் இவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியதை அடுத்து இவர்களின் திருமண ஏற்பாடு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இவர்களின் திருமணம் ஓகஸ்ட் 8-ஆம் திகதி அடையாறில் உள்ள ஒரு பிரபலமான நட்சத்திர ஹோட்டலில் எளிமையான முறையில் நடைபெற உள்ளது.
திருமணத்திற்கு இன்னும் ஒரு நாளே இருப்பதால், நேற்று மெஹந்தி பங்ஷன் கோலாகலமாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்காக மணப்பெண்ணும், மாப்பிள்ளையும் மஞ்சள் நிற அட்டகாசமாக இருந்தனர்.
மணப்பெண்ணின் கையில் அழகாக மருதாணி போடப்பட்டு இருந்தது.
இந்த விழாவில் ஷாரிக் ஹாசன் தனது வருங்கால மனைவி முத்தம் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.