நட்ட நடு ரோட்டில் காரில் செல்லும் போது நடந்த கொடுமை... அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி சீரியல் நடிகை எமோஷனல்..!

நட்ட நடு ரோட்டில் காரில் செல்லும் போது நடந்த கொடுமை... அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி சீரியல் நடிகை எமோஷனல்..!

திரை உலகில் நடக்கின்ற அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து அடிக்கடி இணையங்களில் அபரிமிதமான செய்திகள் பரவி வருகின்ற வேளையில் சின்னத்திரை சீரியலில் நடித்து வரும் நடிகையான மீனா வேமுரி அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

இதற்கு காரணம் இந்த அட்ஜெஸ்ட்மென்ட் விவகாரமானது பெரிய திரையில் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் அதிகளவு நடந்து வருவதாக ஓப்பனாக சொல்லி இருக்கும் விஷயம் தற்போது ரசிகர்களின் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ஈரமான ரோஜாவே சீரியலில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் நடிகை மீனா வேமுரி தனக்கென்று அதிகளவு ரசிகர்களை பெற்றிருக்கிறார். திங்கள் முதல் சனி வரை ஏழரை மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் திரவியம் ராஜ் குமாரன், கேப்ரியலா, சித்தார்த் குமார், சுவாதி போன்ற முக்கிய கதாபாத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள்.

இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் இளைஞர்களின் ஆதரவும் இந்த தொடருக்கு உள்ளதால் டிஆர்பி ரேட்டிங்கில் சக்கை போடு போட்டு வரும் இந்த தொடரில் இரண்டு மகன்களுக்கு அம்மாவாக பார்வதி என்ற ரோலில் நடித்து இருக்கிறார்.

இந்த சீரியல் மட்டுமல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இலக்கியா என்ற தொடரிலும் குறிப்பிட்ட கதாபாத்திரத்தை ஏற்று செய்திருக்கும் இவர் அண்மையில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருக்கிறார்.

இந்தப் பேட்டியின் போது அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் கலகலப்பாக இருக்கும் என்னிடமும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பலரும் தொலைபேசி வழியாக பேசியிருக்கும் விவரங்களை பகிர்ந்து கொண்டார்.

மேலும் எட்டு வருடமாக நடிப்புத் துறையில் இருக்கக்கூடிய இவருக்கு அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை இருந்துள்ளது. சிலர் இவரிடம் நேரடியாகவே பட வாய்ப்பு குறித்து பேசும் போது அட்ஜஸ்ட்மென்ட் பற்றி கேட்டிருப்பதாக சொல்லி இருக்கக்கூடிய இவர் அதை தவிர்ப்பதற்காக அந்த மாதிரி எண்ணம் இருந்தால் எனக்கு வாய்ப்பே வேண்டாம் என்று சொல்லி விடுவதாக சொல்லி இருக்கிறார்.

அத்தோடு நடுரோட்டில் காரில் செல்லும் போது நடந்த கொடுமையை பற்றி எமோஷனலாக பேசியிருப்பதில் ரசிகர்களின் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

இதற்குக் காரணம் ஒரு முறை காரில் மீனா வேமுரி சென்று கொண்டிருந்த போது கார் திருப்பி சென்றது சரியாக இல்லை என்பதால் என்னை பின் தொடர்ந்து ஒருவர் வேகமாக வந்து என்னுடைய காரை இடித்து நிறுத்தக் கூடிய வகையில் பிரேக் போட்டு நிறுத்தி உயிர் பயத்தை காட்டினார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத நான் அந்த நேரத்தில் என் காரை விட்டு இறங்கி வெளியே வந்து நடு ரோடு என்று கூட பார்க்காமல் அந்த நபரை பளார் என கன்னத்தில் அறைந்து விட்டேன்.

இதற்கு காரணம் நான் காரை சரியாக ஓட்டவில்லை என்றால் என் அருகே வந்து திட்டி இருக்கலாம். அதை விட்டு விட்டு இப்படி காரை இடிப்பது போல் வந்தால் நான் என்ன செய்வேன். இது தான் நடந்தது என்று மீரா வேமுரி கூறியது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் இவரது கோபத்தில் அர்த்தம் உள்ளது என்று கூறி வருவதோடு மட்டுமல்லாமல் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனைகளை குறித்து எவ்வளவு பேசினாலும் அதற்கு முடிவு கட்ட முடியாத நிலை என்றும் நிலவுவது எதனால் என்பது பற்றி பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES