உயிர் பிரியும்போது அப்பாவிற்கு செய்து கொடுத்த சத்தியம்! கண்கலங்கிய டிடி
பிரபல தொகுப்பாளினி டிடி தனது தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தைக் குறித்து தற்போது கூறியுள்ளார்.
பிரபல ரிவியில் பல நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கியவர் தான் டிடி. தற்போது சீரியல், படங்கள் என நடித்து வருவதுடன், சில படங்களுக்கு டப்பிங் குரலும் கொடுத்துள்ளார்.
திவ்யதர்ஷினி கடந்த 2014ம் ஆண்டு தனது நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரைக் காதலித்து திருமணம் செய்தார். பின்பு வெறும் 3 ஆண்டுகளில், அதாவது 2017ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்துவிட்டனர்.
விவாகரத்திற்கான காரணத்தை அவர் இதுவரை தெரிவிக்காமல் இருந்த சமீபத்தில் இதற்கான காரணத்தை தெரிவித்திருந்தார்.
விவாகரத்து ஆகி 7 ஆண்டுகள் ஆகியும் தனிமையாகவே வாழ்ந்து வரும் டிடி தற்போது தனது தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை குறித்து பேசியுள்ளார்.
நேர்காணல் ஒன்றில் தனது தந்தையைக் குறித்து டிடி பேசியிருந்தார். தந்தைக்கு மரண தருவாயின் போது அவர் குடும்பத்தை பார்த்துக் கொள்ளக் கூறியுள்ளார். அதற்கு டிடி “நீங்கள் கவலை படாதீங்கப்பா நான் பார்த்துக்கொள்கிறேன்..” என்று பேசியதை கூறியுள்ளார்.
இவரது தந்தை இறந்து 19 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், கடந்த 4 வருடங்களுக்கு முன்பு அவருக்கு கடிதம் ஒன்றினை எழுதி அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிடவும் செய்திருந்தார்.
அதில், நீங்கள் உயிருடன் இருந்த போது உங்களுக்கு ஒரு நல்ல ஷர்ட் வாங்கி கொடுக்காததை எண்ணி தான் இப்போதும் வருத்தப்படுவதாகவும் அவரை எல்லா நாளும் மிஸ் செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
டிடியின் தந்தை அவரை சிறுவயதிலிருந்தே தன்னிச்சையாக செயல்படுவதற்கு பல செயல்களை செய்ய வைத்துள்ளதையும் தெரிவித்துள்ளார்.