ரெட்ரோ படம் எப்படி இருக்கு.. படத்தை பார்த்துவிட்டு ஹீரோ சூர்யா சொன்ன விமர்சனம்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ரெட்ரோ.
இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே முதல் முறையாக நடித்துள்ளனர். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், ரெட்ரோ படத்தை பார்த்துவிட்டு சூர்யா சொன்ன விமர்சனம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பட ப்ரோமோஷன் பேட்டியில் இதுகுறித்து பேசியுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
இதில் ரெட்ரோ படத்தை பார்த்த சூர்யாவிற்கு முழு திருப்தி ஏற்பட்டதாம். படத்தை முழுமையாக பார்த்து முடித்துவிட்டு, நல்லா வந்துருக்கு என சூர்யா கூறினாராம். மேலும் ரொம்ப சந்தோஷப்பட்டதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.